கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

பஞ்ச அங்கத்தில் கரணம் ஒரு அங்கமாகும். திதியில் இரண்டு பங்கு கரணமாக வரக்கூடியது; அதாவது ஒரு திதியின் 12 பாகையில் 6 பாகைக்கு ஒரு கரணமாக 12 பாகைக்கு இரண்டு கரணமாக வரும். கரணங்கள் மொத்தம் 11.

கர்ணம்

  • ✓மண் தத்துவம்
  • ✓ வாழ்க்கையில் ஒருவர் ஜெயிக்க கரணத்தை பிடித்தால் முன்னேற முடியும்
  • ✓ கர்ண நாதனை பலப்படுத்த வாழ்வில் முன்னேற்றம் பெற முடியும்
  • ✓ அதனால்தான் கரணம் தப்பினால் மரணம் என்று சொல்வார்கள்
  • ✓ கரணம் என்பது நம் ரத்தத்தில் கலந்து இருப்பது
  • ✓ கர்ணம் என்பது சந்திரனை அடிப்படையாகக் கொண்டது
  • ✓ கர்ணம் என்பது அச்சாணி போன்றது
  • ✓ கரணங்கள் மொத்தம் 11. 11 என்பது வெற்றி ஸ்தானத்தை குறிப்பது.
  • ✓ அதனால் தான் பதினொன்றாம் இடத்துக்கு கும்பம் கொடுத்திருக்கிறார்கள். உச்சகட்ட மரியாதை என்பது கும்பத்தில் தான் கிடைக்கிறது.
  • ✓ கர்ணத்தை பிடித்தால் காரிய சித்தி கிடைக்கும்

கர்ணங்கள் இரண்டு வகைப்படும்

1) சர கர்ணம்
2) ஸ்திரக் கர்ணம்

✓ சர கர்ணம் என்பது 3 1/2 நாட்களுக்கு ஒரு முறை வரும்

சரக்கர்ணம் – 7


1) பவம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்
2) பாலவம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்
3) கௌலவம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்
4) தைதுளை கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்
5) கரசை கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்
6) வணிசை கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்
7) பத்திரை கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

✓ வாரத்தின் ஏழு நாட்களை பரிபூர்ணமாக குறிப்பிடக்கூடியது சர கர்ணங்கள்

1) பவம் (சிங்கம்) உடலை குறிப்பிடகிறது
2) பாலவம் (புலி) மனதை குறிப்பிடுகிறது
3) கௌலவம் (பன்றி) உறவுகளை குறிப்பிடுகிறது
4) தைதுளை (கழுதை) பித்ருக்களை குறிப்பிடுகிறது
5) கரசை (யானை) நிலம் என்னும் பூமியை குறிப்பிடுகிறது
6) வணிசை ( பசு அல்லது எருது) வியாபாரம் மற்றும் படிப்பை குறிப்பிடுகிறது
7) பத்திரை (கோழி) வழக்குகளை குறிப்பிடுகிறது. ஒன்றை அழித்து ஒன்றை உருவாக்க கூடியது

  • ✓சர கர்ணங்களில் வரக்கூடிய முதல் ஐந்து கர்ணங்கள் பூரண சுபத்துவம் வாய்ந்தது
  • ✓ சர கரணத்தில் வரக்கூடிய வணிசையும் ஸ்திர கர்ணத்தில் வரக்கூடிய சதுஷ்பாதமும் மத்திம சுபக்கர்ணங்கள்
  • ✓ ஸ்திர கர்ணங்கள் அனைத்தும் சாந்தி பரிகாரம் செய்வதற்கும், மந்திர உச்சாடனம் செய்வதற்கும் உகந்தது.
  • ✓ தாம்பத்தியத்திற்கு ஸ்திர கர்ணம் பயன்படுத்தக்கூடாது.
  • ✓ எந்தவித மோசமான கிரக அமைப்பு நம் ஜாதகத்தில் இருந்தாலும் கரண நாதன் என்று சொல்லக்கூடிய கிரகம் நம்மை காப்பாற்றும்.
  • ✓ அவரவர் கர்ணநாதன் மிகுந்த நற்பலன் செய்யக்கூடியவர்.
  • ✓ அவர் எப்படி இருந்தாலும் அதாவது அஸ்தமனம், மறைவு ஸ்தானம் எப்படி இருந்தாலும் நற்பலனை செய்வார்.
  • திதி சூனியத்தில் அகப்பட்டு இருந்தால் மட்டும் நற்பலன்களை சற்று குறைத்து செய்வார்.

ஸ்திரக்கர்ணம்


1) சகுனி – காகம்
2) சதுஷ்பாதம் – நாய்
3) நாகவம் – பாம்பு
4) கிம்ஸ்துக்னம் – புழு
விஷ்டி – தேள்

ஸ்திர நிலையான 4 கரணங்கள் அதாவது தேய்பிறை சதுர்த்தசி திதியில் இரண்டாவது கரணம் அமாவாசை திதியில் இரண்டு கரணம் வளர்பிறை பிரதமையில் முதல் கரணம் மட்டுமே அதாவது சகுனி,சதுஸ்பாதம்,நாகவம், கிம்ஸ்துக்னம் ஆகியவை ஸ்திர கணங்களாகும்.

  • ✓ ஒருவரின் ஆசையை சொல்பவர் திதி. அந்த ஆசையை நிறைவேற்றுபவர் கர்ணநாதன்(கர்ணம்)
    ✓ பஞ்சாங்கத்தில் கூட கரணத்தை பற்றி விரிவான விளக்கங்கள் எதுவும் இருக்காது
    ✓ மகரசங்கராந்தி மட்டும் எந்த கர்ணநாதனின் மேல் வருகின்றது என்று மட்டும் குறிப்பிட்டு இருப்பார்கள்.
    ✓ஒரு கர்ணத்தின் முடிவு மட்டும் கொடுத்திருப்பார்கள். ஒரு நாளைக்கு இரண்டு கர்ணங்கள் வரும். இரண்டாவது கரணத்தில் முடிவு இருக்காது.
    ✓ அந்த அளவிற்கு கர்ணத்தை சூட்சுமமாக மறைத்து வைத்திருந்தார்கள்.
    ✓இதனை குருவின் மூலம் மட்டும் அறிந்து கொள்ளட்டும் என்பதற்காக அவ்வளவு சக்தி வாய்ந்தது.
    ✓ ஒவ்வொரு கர்ண த்திற்கும் ஒரு சில மிருகங்களின் குறியீடுகளை கொடுத்திருக்கிறார்கள். அந்த மிருகத்தின் தன்மையை புரிந்து கொண்டால் மட்டுமே நம்மால் எளிமையாக பலன்களை உணர முடியும்.
    ✓ கர்ணநாதனின் மிருகங்களை எப்படி பயன்படுத்தலாம் என்றால் அந்த மிருகத்தின் படத்தை செல்வோன்னில் ஸ்கீரின் சேவராக வைத்துக் கொள்ளலாம்.
    ✓ தினமும் காலையில் எழுந்தவுடனும் இரவும் உறங்குமுன்னும் அந்த மிருகத்தினை பார்க்க வேண்டும்.
    ✓ வீட்டில் அந்த மிருகத்தின் படத்தை நாம் அடிக்கடி கானும் இடங்களில் ஒட்டி வைக்கலாம்
    ✓ அந்த மிருகத்தின் பொம்மையை வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.
    ✓ அல்லது அந்த கர்ண விலங்கை youtube ல் அடிக்கடி பார்ப்பது நல்ல பலனை தரும்.
    ✓ நாம் பார்ப்பதை விட அது நம்கண்களை பார்ப்பது மிகுந்த நற்பலனை தரும் எனவே நேரில் அடிக்கடி சென்று zoo வில் பார்க்க முயிற்சியுங்கள்.
    ✓ நம்கரணத்தின் மிருகத்திற்கு துன்பம் தரக்கூடாது. உதாரணமாக நாய் தெருவில் சுற்றிக்கொண்டு இருந்தால் அதனை கல் எடுத்து அடிப்பது போன்ற செயல்கள் செய்ய கூடாது.
    ✓ கர்ண மிருகத்திற்கு உணவு அளிப்பது மிகுந்த நற்பலனைத்தரும்.
    ✓ கர்ணமே ஒருவரின் ஜாதகத்தில் உயிர் போன்றது.
    ✓ அதுவே ஜாதகரின் எண்ணம் செயல் சிந்தனையை தீர்மானிக்க கூடியது.
    ✓ கர்ண நாத வழிபாடு நாம் கடைசி வரை அதாவது நமது வாழ்நாள் முடியும் வரை கடை பிடிக்க வேண்டும்.
    ✓ மேலும் கர்ண நாதன் என்று ஒரு கிரகத்தை குறிப்பிடுவார்கள், ஒவ்வொரு ஜாதகத்திலும் கர்ணநாதன் என்பவர் மிக முக்கியமானவராவார்
    ✓ அவர் நம் ஜாதகத்தில் எப்படி இருந்தாலும் நம்மை காப்பாற்றுவார்.
    ✓ எனவே கர்ண நாதனின் ( விஷயங்களை) காரகதத்துவங்களை நாம் பயன்படுத்த சிறப்பு தரும்.
    ✓ எனவே நாம் கர்ணத்தை கையில் எடுத்துக்கொண்டால் வாழ்வில் முன்னேறத்தை சந்திக்கலாம்.
  • ✓ ஒரு கர்ணம் என்பது அதிகபட்சமாக 11 1/2 மணி நேரம் தான் வரும்.
  • ✓ ஒரு மாதத்தில் 8 முறை சர கர்ணம் வரும். 7 சர கர்ணங்கள் மற்றும் 4 ஸ்திர கர்ணங்கள்.

7 * 8 = 56 சரக்கர்ணங்கள் ஒரு மாதத்தில் வரும் 4 ஸ்திர கர்ணங்கள் ஒரு மாதத்தில் 60 கர்ணங்கள் இடம் பெரும். வருடத்திற்கு 720 கர்ணங்கள் வரும்.

✓ உங்கள் கர்ண நாதன் ஜாதகத்தில் எங்கு அமர்ந்துள்ளார் அங்கு முழுமையாக இயக்குவார்.

✓ கர்ணங்களின் சந்தியில் பிறக்கும் குழந்தைகளுக்கு உடலில் ஊனம் கண்டிப்பாக கொடுக்கும்.

✓ கர்ணம் சந்திரனின் நகர்வை வைத்து செயல்படுவதால் என்ன அலை ஓட்டம் அதிகப்படுத்தும்.

✓ சந்திரன் மனோகாரர் ஆவார்.

✓ உங்களின் கர்ண நாதனும் பிறப்பு யோகியும் ஒரே கிரகம் ஆனால் மிகவும் சிறப்பு.

✓ கர்ண நாதனின் நட்சத்திரத்தில் இருந்து ஒரு கிரகம் தசை நடத்தினால் மிகப்பெரிய யோகத்தையும், வெற்றியையும் தரும்.

✓ நம் கரண நாதனின் பெயரால் ஒரு நாளாவது அழைக்கப் படுவீர்கள். உதாரணமாக பிறப்பு கௌலவ கர்ணம் எனில் பன்றி என்றும் அழைக்கப் படுவார்கள்.

✓ 11 பாவங்களை இயக்குவதற்கு தான் 11 கர்ணங்கள் வருகின்றன.

✓(லக்னம் தவிர) நாம் அதை முழுமையாக பயன்படுத்த வேண்டும். எந்த வேலையை எந்த கணத்தில் செய்ய வேண்டும் என்பது சாஸ்திர விதி.

✓ எனவே கர்ண தேவதையை அனுசரித்து காரியங்கள் செய்ய வேண்டும் அப்போது அது நமக்கு வெற்றியைத் தரும்.

நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயல்களுக்கும், அதில் நாம் நன்மையான பலன்களை அனுபவிக்க வேண்டுமென்றால் அதாவது செய்கின்ற காரியங்கள் வெற்றி பெற வேண்டுமானல் இந்த 11 கரணங்களில் சுபம், அசுபம் பார்த்து காரியங்கள் செய்தோமானால் எடுத்த காரியம் நிச்சயமாக கைகூடும்.

இந்த கரணங்களின் குணத் தன்மைகளை அதாவது “லட்சணங்கள்” பற்றி இங்கு பார்க்கலாம்.

சுபகாரியங்கள் அல்லது மனத்தில் நினைத்த காரிய பலிதத்திற்க்காக பயணம் மேற்கொள்ளும்போதும் மனதில் எண்ணியது நன்மையாக நடந்தேற மேலே குறிப்பிட்ட சுப கரணங்களில் அதற்குண்டான குணத்தன்மை உள்ளவற்றை சிறிதேனும் உபயோகித்து அதாவது மலர் பயன்படுத்துவது, வாசனை திரவியம் பூசுவது, ஆகாரம் உண்பது , தூபம் போடுவது ஆகியவற்றில் உங்களால் முடிந்ததை அந்த நேரத்தில் உள்ள கரணத்திற்கு ஏற்றவாறு சொல்லியுள்ள தன்மையைப் பயன்படுத்தி முயற்சித்து பாருங்கள். பிறகு உங்களுக்கு எல்லாம் வெற்றிகரமாக அமையும்.

1 thought on “கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

  1. மிக அருமையான பயனுள்ள பதிவு மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *