கௌலவம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

கௌலவம் என்றால் பன்றி என்று அர்த்தம்.

  • தேவதை – மித்திரன்
  • ராசி – மகரம்
  • கிரகம் – சனீஸ்வர பகவான்
  • சேத்திரம் – ஸ்ரீமுஷ்ணம் (வடலூருக்கு அருகில் இருக்கக் கூடியது – பூவராக சுவாமி கோவில்)
  • வராகியும் வழிபாடு செய்யலாம்
  • மலர் – மகிழம்பூ
  • வருடம் – 18 வருடம் நின்று பணி செய்யும்
  • ஆகாரம் – பணியாரம்
  • பூசும் பொருள் -குங்குமம்
  • ஆபரணம் – வெள்ளி
  • தூபம் – வில்வ பொடி
  • வஸ்திரம் – கண்டாங்கி வஸ்திரம்
  • உலோகம் – செம்பு

கௌலவ கர்ணத்தில் செய்யத் தக்கவை

  • புதிய நட்புகளை உருவாக்கிக் கொள்ளலாம்
  • சேமிப்பு தொடங்க மிக நல்ல கர்ணம்
  • சம்பந்தி உறவுடன் உறவாட
  • பிரயாணங்கள்
  • சுப காரியங்கள்
  • மந்திரங்கள் கற்று கொள்ளுதல்
  • யுத்தம் செய்தல்
  • முடியாத விஷயங்களை முடிக்க
  • விருந்துக்கு செல்வது, சம்பந்திகள் இடம் பேசுவது இந்த கரணத்தில் செய்யும் பொழுது சிறப்பாக இருக்கும்.

குணாதிசயங்கள்

  • எல்லோருக்கும் பிரியமானவர்கள்
  • சொத்து அமையும் போது அவரிதமான வளர்ச்சி அடைவார்கள்
  • தடை தாமதத்திற்கு பிறகு வீடு அமையும்
  • வாக்கு பலிதம் உண்டு
  • குடும்பத்தார் மீது பற்று பாசம் மிக்கவர்கள்
  • சமயோகித புத்தி உடையவர்கள்
  • நட்பை விரும்பக் கூடியவர்கள்
  • கூட்டுக்குடும்பத்தில் தலைவர்களாக இருப்பார்கள்
  • பூர்விக வீட்டுக்கு அருகில் கோவில் இருக்கும்
  • மிகவும் நல்லவர்கள்
  • இவர்களுக்கு என்று ஒரு தனி நட்பு வட்டாரம் உண்டு
  • நட்பு, அன்பு, பாசம், காதல் உள்ள குடும்பம்
  • சுயநலம் உண்டு
  • எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் மிகுந்தவர்கள்
  • தடை தாமதத்திற்கு பிறகு தான் வீடு அமையும்
  • கருக்கலைப்பு செய்த குடும்பம்
  • வாக்கு பலிதம் உண்டு (இவர்கள் ஐந்தாம் பாவகம் சம்பந்தமான விஷயங்களை சொன்னால் அப்படியே நடக்கும் குறிப்பாக குழந்தை பிறப்பு பற்றி சொன்னார்கள் என்றால் அப்படியே நடக்கும்)
  • கோபத்தை அடக்க முடியாதவர்கள்
  • கோபத்தை சாப்பாட்டின் மீது காமி பார்கள்
  • தலைமை தாங்கி எதையும் நடத்தும் திறமை
  • அத்தையின் மண வாழ்க்கை சிறப்பாக இருக்காது
  • இவர்கள் ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருந்தால் தந்தைக்கு உயர்வு தந்திருக்கும்
  • பெரிய தொழில் நிறுவனங்களில் வேலை செய்வார்கள் அல்லது பெரிய நிறுவனங்களை நிறுவனம் என்ற எண்ணம் இருக்கும்
  • இவர்கள் தவறான பழக்க வழக்கத்தை பழகிக்கொண்டால் கடைசி வரை நிறுத்த முடியாமல் கஷ்டப்படுவார்கள்
  • கௌலவத்தில் ஒரு குழந்தை பிறக்க கட்டாயம் அந்த குடும்ப முன்னேற்றம் அடையும்
  • இவர்களிடம் ஒரு பொருளை வாங்கிக் கொண்டு சென்றால் அடுத்தவர்களுக்கு அது நன்மை சேர்க்கும்
  • மண்ணைத் தோண்டி செய்யக்கூடிய தொழில்கள், இரும்பு, ஜோதிடம், பெரிய வாகனங்கள், லேபர் காண்ட்ராக்ட்

பரிகாரம்

  • தினமும் வெயிலில் காலனி இல்லாமல் நடக்க வேண்டும் அல்லது காலனி தானம் கொடுப்பது சிறப்பு
  • சனிக்கிழமையில் திருநள்ளாறு பதிகம் படிப்பது சிறப்பு
  • குறிப்பாக 7 1/2 மணி நடப்பவர்கள், அஷ்டம சனி நடப்பவர்கள் கௌலவ கரணம் வரும் நாளில் திருநள்ளாறு பதிகம் படிப்பது சிறப்பு
  • பள்ளியறை பூஜை பார்ப்பது சிறப்பு
  • திருதியை திதி, ரோகினி நட்சத்திரம், சனிக்கிழமை, கௌலவ கரணம் இவை நான்கும் சேர்ந்து வரக்கூடிய நாளில் ஏதேனும் பொருளை வாங்கினால் அபரிவிதமான வளர்ச்சியை தரும்

ஸ்தலங்கள்

  • உத்திரகோசமங்கை வராகி
  • பல்லூர் வராகி
  • ஸ்ரீவாஞ்சியம்
  • திருநள்ளாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *