ஷடசீதி புண்ணிய காலம்

ஷடாங்கன் என்றால் சிவன். சிவனுக்குாிய மாதங்கள் ஆனி, புரட்டாசி, மாா்கழி, பங்குனி, இந்த மாதங்கள் பிறக்கும் நேரமே ஷடசீதி புண்ணியகாலம். நாளைய மதியம் புரட்டாசி மாதம் பிறக்கிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை மதியம் 01.29 மணிக்கு சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கிறார் அந்த நேரமே ஷடசீதி புண்ணிய காலம் முதல் 24 மணி நேரம் சிவனுக்கு விசேஷமான ‘ஷடசீதி புண்ணிய காலமாகும். ஒவ்வொரு வருடமும் ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி 1 ம் தேதி ஆக வருடத்தில் நான்கு…

12 ராசிகளுக்கான விநாயகர் சதுர்த்தி வழிபாடு – Ganesha Chaturthi Worship for 12 Rasis 2023

சதுர் என்றால் நான்கு என்று அர்த்தம். நான்கு என்பது 1-4-7-10 கேந்திர ஸ்தானங்களாக குறிக்கக்கூடிய நாளாகவும் விநாயகருக்கு உகந்த திதியாகவும் அமைந்துள்ளது. கேது பகவானின் அதிதேவதையாக இருக்கக்கூடியவர் தான் விநாயகர். கேது என்பவர் நமக்கு ஆத்மா ரீதியான இன்பங்களை தரக்கூடியவர், துன்பங்களால் நம்மை துரத்தி வாழ்க்கையின் தத்துவ மூலத்தை உணர்ந்து ஞானத்தை அளித்து பிறவி பிணியை அறுக்க கூடியவர். கர்மவினையை அனுபவித்து தீர்க்கும் போது ஏற்படக்கூடிய இன்னல்களை தான் நாம் துன்பம் என்று கூறுகின்றோம். யோகங்களை அளித்து…

திருப்பாவை பாடல் 15

எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுகஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையைஎல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்கவல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய். பொருள்: ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ…

திருப்பாவை பாடல் 14

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய். பொருள்: எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த…

திருப்பாவை பாடல் 13

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனைகிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுபுள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதேபள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய். பொருள்: பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன் மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே, நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகி விட்டது.…

திருப்பாவை பாடல் 12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கிநினைத்து முலைவழியே நின்றுபால் சோரநனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றிசினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்றமனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய். பொருள்: பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு…