திருப்பாவை பாடல் 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான்பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும்…

ஆண்டாள் அருளிய திருப்பாவை

“மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று கண்ணபிரான் கீதையில் மொழிந்துள்ளார். மார்கழி மாதம் இவ்வாறு சிறப்பு மிக்கதாக இருக்கவும், நாட்டுப்புறங்களில் மார்கழி மாதத்தை பீடை மாதம் என்று சொல்லி மங்கள வினைகளை எதனையும் ஆற்றாமல் தவிர்த்து வருகிறார்கள். ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்’ என்ற திருப்பாவை தொடங்குகின்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்கொடியாம் ஆண்டாள், ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஆவர். “மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்று திருவரங்கத் துறை திருவரங்க நாதரையே…

விஷ்ணுபதி புண்ணிய காலம்

அக்ஷய ஜோதிட வித்தியாலயத்தின் கோவை மையத்தின் அஸ்ட்ரோ ஜ்வாலா வழங்கும் ஸ்ரீ விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹நெஞ்சுக்கு நிம்மதி! ஆண்டவன் சன்னதி!! நினைத்தால் எல்லாம், விஷ்ணுபதி புண்ணிய காலத்திலே……..🙏🙏* 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பது சூரிய பகவான் ஸ்திர ராசிகளில் சஞ்சரிக்கும் முதல் நாளாகும். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர ராசிகளில் சூரியன் சஞ்சரிக்கின்ற முதல் நாளே ஸ்ரீ விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். இந்த நான்கு நாட்கள் மட்டுமே ஒவ்வொரு தமிழ் வருடத்திலும்…

நினைத்ததை சாதிக்க உதவும் சோடசக்கலை நேரம்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களா? நாளை நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்யுங்கள். அதற்கான அற்புதமான நாள் கூடி வந்துள்ளது. நம்முடைய சித்தர்கள் நாம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வதற்காக, இந்த சோடசக்கலை நமக்கு சொல்லி வைத்துள்ளார்கள். குறிப்பாக இந்த புரட்டாசி அமாவாசை தினமான நாளை நீங்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ள கடவுளை நினைத்து தியானம் செய்ய வேண்டிய அந்த சோடசக்கலை நேரம் என்பது நாளை மாலை 03.49 லிருந்து 05.25 மணி வரை உள்ளது. சோடசக்கலை…

முகுந்தமாலா மந்திரம் – Mukunda mala mantra

முகுந்த மாலா முன்னுரை   ஶ்ரீ  முகுந்த மாலா என்னும் இந்த ஸ்தோத்திரம் ஸ்ரீ குலசேகர மன்னரால் இயற்றப்பட்டது என்று ராஜ்ஞா க்ருதா க்ருத்தியம் குலசேகரேண என்னும் இந்த ஸ்லோகத்தில் இறுதி ஸ்லோக  வரியில் தெரிகிறது.  இந்த குலசேகர மன்னர் யார்? ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒருவரும் குலசேகரப்பட்டினத்தை ஆண்ட மன்னரும் ஆவார். குலசேகராழ்வார் ஊர் திருவஞ்சைக்களம், பிறந்த நாள் மாசித் திங்கள் புனர்பூசம், கௌத்துவ மணியின் அவதாரம் என்பர். இவர் அரசு குலத்தைச் சேர்ந்தவர் அரியணை துறந்து…

குழந்தையில்லாதவர்களுக்கான உளுந்து பரிகாரம்*

புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில், மீமிசல் என்ற ஊரில் உள்ளது கல்யாணராமர் கோவில். இங்கு திருமணமாகாதவர்களுக்கு உளுந்து பிரசாதம் வழங்கப்படுகிறது. இங்கு வரும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு, ராகுவின் தானியமான கருப்பு உளுந்தை, முகுந்தமாலா என்று கூறப்படும் மந்திரத்தை உச்சரித்து 90 நாட்களுக்கு தேவையான அளவு பிரசாதமாகத் தருகின்றனர். இதனை 90 நாட்கள் சாப்பிடுவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் நம்பிக்கையுள்ளது. அத்துடன் ராமர் சன்னதியில் தவழ்ந்த நிலையில் இருக்கும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட சந்தானகிருஷ்ணன்…

Remedy for Ubaya Lagnam – உபய லக்ன பாதகாதிபதி பரிகாரம்

உபய லக்ன பாதகாதிபதி பரிகாரம் பொதுவாக 7 ஆம் இடம் என்பது ஒருவருக்கு வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையைத் தரக்கூடிய திருமணம், நண்பர்கள், சம்பந்தி, பொது ஜன தொடர்பு போன்றவற்றை குறிப்பிடக் கூடிய பாவகமாக அமைகிறது. ஆனால் உபய லக்கின ஜாதாகர்களுக்கு 7 ம் இடம் என்பது இயல்பாகவே பாதாகத்தை தரக்கூடிய ஸ்தானமாகவும் அமைகிறது. எனவே உபய லக்கின ஜாதகர்கள் 7 ம் இட பாவக காரகத்துவங்களால் பாதாகத்தையும் சந்திக்க நேரிடும். எனவே அதற்கு பரிகாரங்கள் கீழே…

Pariharam for Shani in 7th house – 7 ல் சனி இருந்தால் பரிகாரம்

7 ல் சனி இருந்தால் பரிகாரம் (மிதுன லக்கின ஜாதகர்கள்): அலுவலகத்தில் உடன் பணிபுரியும் அலுவலக நண்பர்களுக்கு சூடாக டீ, காபி மற்றும் பலகாரங்கள் வாங்கி கொடுக்கவும். துப்புரவு தொழிலாளர்களுக்கு மாதம் ஒரு முறையாவது தேங்காய் எண்ணை வாங்கி அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

Temples to Visit to get rid of Debts

அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில் – கும்பகோணம் அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில் – சீர்காழி அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில் – திருவாரூர் அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் – திருநள்ளாறு அருள்மிகு திருக்காலடியப்பன் திருக்கோயில் – எர்ணாகுளம் அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில் – திருநின்றியூர்

புத்திர தோஷம் நீங்க

கிருஷ்ண ஜெயந்தி அன்று மழலை கண்ணணை வரவேற்கும் விதமாக பெண்கள் தங்கள் இல்லங்களில் மாக்கோலம் போட்டு பூஜை அறை வரை கண்ணணின் பாதம் வரைந்து பசுவுக்கு உணவளித்து கண்ணணுக்கு விருப்பமான பால், தயிர், வெண்ணெய், சீடை முறுக்கு, நாவல்பழம், அவல் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை 108 முறை ஜபித்து, பூக்கள் தூவி, தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். இவ்வாறு கோகுல அஷ்டமி அன்று வழிபடும் போது புத்திர தோஷம்…