சயன தோஷம் பரிகாரம்

பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு அதற்கு தேவைப்படும் பொருள்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். சிவன் கோயிலில் பள்ளியறை பூஜை நடக்கும் தருவாயில் பால் அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுப்பதும் மல்லிகைப்பூ சாத்தும் சிறந்த பரிகாரம். அல்லது கோவிலில் உள்ள தீபங்கள் நெய் வாங்கிக் கொடுத்தாலும் 12ம் பாவகம் வலுப்பெறும். இப்போது உள்ள சூழ்நிலையில் divorce பெரிய காரணமாக இருப்பது சயன தோஷம் தான். ஒருவருக்கு இருந்து மற்றவருக்கு இல்லாமல் இருப்பது அவர்களுக்குள் பிரிவினை உண்டாகிறது

கணவன் மனைவி சேர்ந்து வாழ பரிகாரம்

தொட்டா சிணுங்கி செடியை வீட்டில் வைத்து வளர்க்கும் போது, தம்பதியருக்கு இடையில் இருக்கும் பிணக்குகள், சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் குறைந்து நல்ல இணக்கமான போக்கு உண்டாகும். அது மட்டும் இன்றி தம்பதியருக்கு இடையில் பாசம் அதிகரிக்கும். தொட்டா சிணுங்கி செடியின் 6 வேர்களை எடுத்து ஒரு ஜாரில் போட்டு அதை கணவரின் கண்ணில் அனுதினமும் தெரியுமாறு வைக்க வேண்டும். இதனால் கணவருக்கு மனைவியின் மேல் பிரியம் அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் அன்னியோனியம் அதிகரிக்கும்.

Punarphoo Dosha Remedy – புனர்பூ தோஷம் – பரிகாரம்

புனர்பூ தோஷம் என்றால் என்ன?? ஒருவருடைய ஜாதகத்தில் புனர்பூ தோஷம் என்பது கர்ம காரகன் ஆன சனியும், மனோகாரகன் ஆன சந்திரனும் இணைவு அல்லது தொடர்பு பெறும் போது உண்டாகிறது. அதாவது: சனியும், சந்திரனும் சேர்ந்து ஒரே வீட்டில் இருப்பது. சனி வீட்டில் சந்திரனும், சந்திரன் வீட்டில் சனியும் பரிவர்த்தனை பெற்று அமர்ந்து இருப்பது. சனியின் நட்சத்திரத்தில் சந்திரனும் அல்லது சந்திரன் நட்சத்திரத்தில் சனியும் இருப்பது. சனி மற்றும் சந்திரன் பரஸ்பரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது. பொதுவாக…

திருமணத் தடை நீக்கும் திருவிளக்கு பூஜை

திருமண தடையை நீக்க வீட்டிலேயே எளிய முறையில் திருவிளக்கு பூஜை செய்வது எப்படி? ஆடி மாதம் வரும் வெள்ளிக் கிழமைகளில் வீட்டிலேயே திருவிளக்கு பூஜை செய்வதால், செவ்வாய் தோஷம், கால சர்ப்ப தோஷம் போன்ற தோஷங்கள் நீங்கி, மனதிற்கு பிடித்த நல்ல வாழ்க்கைத் துணை அமையும். இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். மேலும் அம்பிகையின் அருளால் வரும் காலம் வரம் தரும் காலங்களாக அமையும். பொதுவாகவே ஆடி மாதம் இறை வழிபாட்டுக்கும், பூஜைகள் செய்வதற்க்கும் உகந்த மாதம்.…