ராகு கேது பெயர்ச்சி பலன்கள் விருச்சிகம் ராசியனருக்கு

உங்கள் ராசியில் கேது 7 ஆம் பாவத்தில் ராகு இருந்த நிலை மாறி இனி விரைய ஸ்தானமான 12 ஆம் பாவத்தில் கேது 6ஆம் பாவத்தில் ராகு வருகிறது. ஏழரை சனியால் அவதிப்பட்டு பின்னர் விடுபட்டாலும் ஜென்ம கேது மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதுநாள் வரை யாருக்கோ போக வேண்டிய பிரச்சனைகள் உங்களை வாட்டி வதைத்தது. இனி பிரச்சினைகள் தீரப்போகிறது. எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன்கள் அடைப்படும் தீராத நோய்…

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசியனருக்கு

ராசியில் கேது வந்து அமர்கிறார். ஏழாம் வீட்டில் ராகு பயணம் செய்கிறார். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு அமர்வதால் கஷ்டங்கள் நீங்கி இனி தலை நிமிரலாம். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி ஓன்று சேரலாம். ராசியில் கேது சஞ்சரிப்பதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும்.வருமானம் திருப்தி தரும்.தேவைகள் பூர்த்தியாகும்.குடும்பத்தில் பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்வீர்கள். தடைபட்ட பணவரவுகள் திரும்ப…

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் கன்னி ராசியனருக்கு

ராகு பெயர்ச்சி யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரப்போகிறது. எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். கோர்ட் வம்பு வழக்கு சாதகமாகும்.சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ராசிக்கு 2ஆம் வீட்டில் கேது வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். உங்கள் முயற்சி தன்னம்பிக்கை மூலம் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். தம்பி,தங்கைகளுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். பயணத்தடைகள் நீங்கும். தெய்வ நம்பிக்கை…

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் சிம்மம் ராசியனருக்கு

கடந்த காலங்களில் பல பிரச்சினைகளை சந்தித்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் விமோசனம் கிடைக்கும். வருமானம் திருப்தி தரும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இடையூறு நீங்கும்.மறைமுக எதிர்ப்புகள் விலகும். கேது மாறி வரும் இடம் முன்றாம் பாவம் சகோதரம்,வீரியம்,வீரம்,எழுத்தறிவு,விளையாட்டு ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடி வரும், புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். நிர்வாக பொறுப்புகள் தேடி வரும். நினைத்த காரியம் கைகூடி வரும். நிலம் , வீடு…

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் கடகம் ராசியனருக்கு

லாப ஸ்தானத்தில் இருந்த ராகு தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். நீங்கள் எடுக்கும் ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். தொழிலாளியாக இருந்த நீங்கள் முதலாளி ஆகும் யோகம் வரும். நினைத்த மாதிரி நல்ல வேலை வாய்ப்பு அமையலாம் சம்பள உயர்வும் வசதி வாய்ப்புகளும் தேடி வரும். சொந்த வீடு வாங்கும் யோகம் வரும், சுப காரியங்கள் நல்லமுறையில் கைகூடி வரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு இனி சிறிது சிறிதாக கடன்…

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மிதுனம் ராசியனருக்கு

ராகு லாப ஸ்தானத்திற்கு மாறுவதால் எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் கொடுப்பார். ராகு போட்டி பொறாமைகளை ஒழிப்பார். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள். அடுத்தவர்களின் சூழ்ச்சியால் உங்களுக்கு வந்த பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான். பலவித சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும். வாங்கிய கடனுக்கு அசலுக்கு அதிகமாக கடனை செலுத்தியவர்களுக்கு கடன் சுமை குறையும். காரிய வெற்றி உண்டாகும்.…

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் ரிஷப ராசியனருக்கு

இதுநாள்வரை உங்கள் ராசியில் அமர்ந்து உங்களை ஆட்டிப்படைத்த ராகு இனி விரைய ஸ்தானத்திற்கு மாறுவது சிறப்பு. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதன் அடிப்படையில் இப்பொழுது கெட்ட இடத்திற்கு ராகு கேது வருவது நல்லது தான். உடல் வலி நீங்கும், மனதில் இருந்து வந்த இனம் புரியாத பயம் நீங்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நல்ல தூக்கம் வரும். உடலில் தெம்பு உண்டாகும். எதிரிகளின் கொட்டம் அடங்கும். கடன் தொல்லைகள் குறையும். தாய்மாமனுடன் கருத்து வேறுபாடுகள்…

ராகு கேது பெயர்ச்சி 2022 : கோடீஸ்வரர் தரும் தரப்போகும் ராகு கேது – யாருக்கு பரிகாரம்

மேஷம் ராசி பலன்கள் ஜென்ம ராகு, ஏழாம் வீட்டில் கேது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராகு உங்கள் ராசிக்கு வந்திருக்கிறார். திடீர் பணவருமானம் வரும் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். மனைவி பெயரில் புதிய தொழில் தொடங்கலாம். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வேலையில் திடீர் இடமாற்றம் வரலாம். திடீர் செலவுகள் வரும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். கண் நோய் நீங்கும், பல் சம்பந்தமான நோய்கள்…

ராகு கேது பெயர்ச்சி 2022 : கோடீஸ்வரர் தரும் தரப்போகும் ராகு கேது – யாருக்கு பரிகாரம்

நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் 18 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. நிகழும் பிலவ வருடம் பங்குனி மாதம் 29ஆம் தேதி 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு யோகங்கள் தேடி வரும் யாருக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று…