நட்சத்திரங்கள்

நமது அண்டத்தில் உள்ள கோள்களை விட, நமது சூரியனை விட பன்மடங்கு ஆற்றல் பெற்றவை இந்த நட்சத்திரங்கள். தன் இருப்பிடத்தில் சஞ்சரிக்கும் கிரக இயல்பை முற்றிலும் மாற்றி அமைக்கும் ஆற்றலை பெற்றவை நட்சத்திரங்கள். இவை மட்டுமின்றி நமது வாழ்வில் நடைபெறும் யாவற்றிலும் 108 கலந்திருக்கிறது அண்ட சராசர இயக்கமே நட்சத்திரங்களின் 108 பாதங்கள் வழியே தான் நடைபெறுகிறது. 27 நட்சத்திரங்களின் 108 பாதங்களே ஜோதிட பலாபலன்களின் ஆதாரம். கை பார்ப்பவன் மருத்துவன் கால் பார்ப்பவன் ஜோதிடம் நட்சத்திர…

ஜோதிடம் கற்று கொள்ள ஆர்வமா ? படியுங்கள்

நேரடி ஜோதிட பயிற்சி ஜனனி ஜன்ம சௌக்யானாம் வர்தநீ குலஸம்பதாம்பதவி பூர்வ புண்யாணாம் லிக்ய தே ஜன்ம பத்திரிகா ! ஜோதிடத்தை சமஸ்கிரகத்தில் ஜோதிஷம் என்று கூறுவார்கள் . ஜோதி என்றால் ஒளி என்று பொருளாகும் , ஜோதிஷம் என்றால் ஒளியின் சிறப்பு என்று பொருள். ஜோதி இடம், ஜோதி திடம் எனப் பிரித்தும் பொருள் கொள்ளலாம். ஒரு ஜீவன் பூமியில் உதிக்கும் காலத்தில் வான வீதியில் பன்னிரு ராசிகளில் உள்ள 27 நட்சத்திரங்களில் நவகோள்களும் உலா…

ஒன்பது கிரகங்களும் – அதற்குரிய தாவரங்களும்

சூரியன்பெரிய மரங்கள், மருந்து செடிகள், கோதுமை, நெல், வேர்க்கடலை, தென்னை, ஜாதிக்காய், மசாலா செடிகள், ஓமம், மிளகு, பெரிய காடுகள், நெல்லி, மணிபுங்கம், வெண் தேக்கு, வேங்கை மரம், வாதநாராயண மரம், எட்டி மரம், புங்க மரம், பலா மரம், பனை மரம், செந்தாமரை, பாலைவனம் முட்செடிகள், புதர்கள், மரங்கள் போன்றவற்றை அனைத்தும் சூரியன் குறிக்கும் தாவரங்கள் ஆகும். சந்திரன் :நாவல் மரம், மந்தாரை நாகலிங்க மரம், அத்திமரம் தென்னை மரம் , சிறு நாகப்பூ, பாக்கு…

ரேவதி நட்சத்திரம்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகான உடலமைப்பும், வசீகரமான கண்களையும் கொண்டவர்கள். எல்லாருக்கும் எல்லா வகையிலும் நன்மை செய்ய எண்ணுவார்கள். மற்றவர்களின் எண்ணத்தை புரிந்து கொண்டே அதற்கேற்ப நடந்து கொள்வார்கள். எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் தங்களுடைய பேச்சாற்றலால் ஜெயித்துவிடுவார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் நடந்து கொள்வார்கள். யாரையும் கண்மூடித்தனமாக நம்பமாட்டார்கள். அப்படியே நம்பினாலும் கூட யோசித்தே செயல்படுவார்கள். தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி வழிகாட்டுவார்கள். இயற்கையின் மீது அதிக பற்று கொண்டவர்களாக…

உத்திரட்டாதி நட்சத்திரம்

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் என்பதால் எப்போதும் உண்மையே பேசுவார்கள். மிகுந்த சமார்த்தியசாலிகளாக இருப்பார்கள். கவர்ந்திழுக்கும் காந்தம் போன்ற தோற்றத்தைப் பெற்றிருப்பார்கள். மென்மையான குணமும், தூய்மையான மனமும் கொண்டவர்கள். தோல்விகளை கண்டு துவண்டுவிடமாட்டார்கள். சாதுவான குணம் கொண்டவர்களாக இருந்தாலும் கூட கோபம் வந்தால் முரட்டுத்தனம் வெளிப்படும். யாருக்காகவும், எப்போதும் போலி வாழ்க்கை வாழமாட்டார்கள். நண்பர்கள் அதிகமாக இருந்தாலும் கூட அவர்களிடம் எந்த உதவியையும் எதிர்பார்க்கமாட்டார்கள். பிடிவாத குணம் கொண்டவர்கள். பேச்சில் வேகமும், விவேகமும் நிறைந்திருக்கும். பேச்சை…

பூரட்டாதி நட்சத்திரம்

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாற்றலையும், பேச்சாற்றலையும் பெற்றிருப்பார்கள். சற்று முன்கோபியாக இருந்தாலும் பரந்த மனப்பான்மை உள்ளவர்களாக இருப்பார்கள். கடவுள் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருப்பார்கள். சிறந்த கொள்கைவாதியாக இருப்பார்கள். பணத்தை விட அறிவுக்குத் தான் முக்கியத்துவம் அளிப்பார்கள். புத்திசாலிகளாக இருப்பார்கள். எதையும் தொலைநோக்கு பார்வையுடன் அணுகுவார்கள். இதனால் எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டேயிருப்பார்கள். நியாய, அநியாயங்களை தைரியமாக எடுத்துரைப்பார்கள். எந்த ஒரு பிரச்னையையும் நியாயத்தின் வழி நின்று தீர்த்து வைப்பார்கள். தன்னைப் பற்றி யாராவது குறை…

சதயம் நட்சத்திரம்

சதயம் நட்சத்திரக்காரர்கள் உழைத்து வாழ வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தைக் கொண்டவர்கள். ராகு பகவான் இந்த நட்சத்திரத்தின் அதிபதி என்பதால் உடல் வலிமைமிக்கவர்களாக இருப்பார்கள். சிறந்த அறிவாளியாகவும், நேர்மையான வழியில் சம்பாதிப்பவர்களாகவும் இருப்பார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடில்லாமல் அனைவரிடமும் சரிசமமாக பழகுவார்கள். இளகிய மனமும், இறைவன் மீது ஆழ்ந்த பக்தியையும் கொண்டவர்கள். எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். எந்த வேலையையும் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் புத்திக்கூர்மையால் சாதுர்யமாக சாதித்துவிடுவார்கள். எந்தப் பிரச்னை வந்தாலும்,…

அவிட்டம் நட்சத்திரம் – Avittam Nakshatra

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகும், அறிவும் நிறைந்தவர்கள். செவ்வாய் பகவானின் நட்சத்திரன் என்பதால் அனைத்து கலைகளையும் கற்று தேர்ந்திருப்பார்கள். எதற்கும் அஞ்சாத போர்க் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். சிறந்த பக்தியும், நற்குணங்களும், திறன்களும் அமைந்திருக்கும். தங்களது கடமைகளை மிகச்சரியாக நிறைவேற்றுவார்கள். எதிலும் நேர்மையாக பேசுவார்கள். ஜாதி, இனம், மொழி மீது அதிக பற்றுதல் இருக்கும். எப்போதும் சுறுசுறுப்பாக ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டிருப்பார்கள். தங்களிடம் இருக்கும்…

திருவோணம் நட்சத்திரம் – Thiruvonam natcharam

திருவோண நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன் என்பதால் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள். தனக்கென தனிக்கொள்கையுடன் வாழ்வார்கள். சுத்தத்திற்கும், தூய்மைக்கும் அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். சுத்தமில்லாதவர்களை அருகில் கூட சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். இரக்க குணம் உள்ளவர்கள். பிறருக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வார்கள். எந்த ஒரு விஷயத்தையும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் செய்து முடிப்பார்கள். சிறந்த பக்திமானாக விளங்குவார்கள். வாழ்க்கையில் எத்தனை ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தாலும் கூட எளிமையாக வாழ்பவர்கள். அடுத்தவர் பிரச்னைகளுக்கு ஆலோசனைகள் வழங்குவார்கள். நடத்தையில் அடக்கமும், நேர்மையும் நிறைந்திருக்கும்.…

உத்திராடம் நட்சத்திரம்

உத்திராடம் நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான் என்பதால் நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும் உடையவர்களாக இருப்பார்கள். எதிலும் எளிமையை விரும்புவார்கள். ஆடம்பரத்தை விரும்பமாட்டார்கள். எந்த ஒரு காரியத்தையும் நேர்மையாக, தெளிவாக சிந்தித்து செயலாற்றுவார்கள். எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்கமாட்டார்கள். எவரையும் எளிதாக நம்பமாட்டார்கள். ஆனால் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்காக எதையும் செய்ய துணிவார்கள். ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கையையும், மற்றவர்களை மதித்து நடக்கும் பண்பினையும் கொண்டவர்கள். இவர்களை எளிதில் எடை போட முடியாது. மர்மமான மனிதர்களாக இருப்பார்கள்.…