நவராத்திரி பாடல்கள்

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ!ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ!ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ!ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ!ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ!ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ!ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ! இந்த 7 நாமங்களை தினசரி 11 முறை உச்சரித்தால் ஆயிரம் நாமங்களை உச்சரித்ததற்கு சமம். ஈஸ்வர ஸ்வரூபமாக விளங்கும் காஞ்சி மஹா பெரியவர் அன்னை லலிதையின் ஆயிரம் திருநாமங்களில்,தனது உள்ளுணர்வால்…

நவராத்திரி பற்றிய 50 சிறு குறிப்புகள் வருமாறு

1.சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. 2. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம். 3. விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து  பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும். 4. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 5. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி…

புரட்டாசி சனிக்கிழமை பாடல்

ஸ்ரீநிவாசா கோவிந்தா பாடல் வரிகள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… அனைவரும் பெருமாளின் அருளை பெறுவோம்… ஓம் நமோ நாராயணாய ஸ்ரீநிவாசா கோவிந்தாஸ்ரீவேங்கடேசா கோவிந்தாபக்த வத்சலா கோவிந்தாபாகவத ப்ரிய கோவிந்தாநித்ய நிர்மலா கோவிந்தாநீலமேகஸ்யாம கோவிந்தாபுராண புருஷா கோவிந்தாபுண்டரீகாக்ஷா கோவிந்தாகோவிந்தா ஹரி கோவிந்தாகோகுல நந்தன கோவிந்தா நந்த நந்தனா கோவிந்தாநவநீத சோர கோவிந்தாபசு பாலக ஸ்ரீ கோவிந்தாபாப விமோசன கோவிந்தாதுஷ்ட சம்ஹார கோவிந்தாதுரித நிவாரண கோவிந்தாசிஷ்ட பரிபாலக கோவிந்தாகஷ்ட நிவாரண கோவிந்தாகோவிந்தா ஹரி கோவிந்தாகோகுல நந்தன கோவிந்தா வஜ்ர மகுடதர…

புரட்டாசி சனிக்கிழமை படையல்

புரட்டாசி பெருமாள் தளிகை புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமையில் ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு படைப்பது தளியல் ஆகும். வடு வாசலை சுத்தம் செய்து பூஜை அறையில் விளக்கேற்றி படைக்கும் இடத்தில் படையல் கோலம் போட வேண்டும். தளியலுக்கு தேவையான அக்கார அடிசில், எள்ளோதரை, புளி சாதம், மிளகு சாதம், தயிர் சாதம், வடை, கடலை, வாழைக்காய் பொரியல் ஆகிய நைவேத்யங்கள் தயார் செய்ய வேண்டும். குத்து விளக்கின் ஐந்து முகங்களையும் நெய் தீபம் ஏற்றி கோலத்தின் இருபுறமும் வைக்க…

மூதாதையர்கள் சாபம் போக்கும் 3 வது சனிக்கிழமை விரதம்

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு நோற்று உபவாசம் இருப்பது மிகவும் நல்லது. ‘உப’ என்றால் ‘சமீபம்’ என்று பொருள். ‘வாசம்’ என்றால் ‘வசிப்பது’ என்று பொருள். இறைவனுக்கு சமீபமாக செல்ல, நாம் நோன்பு நோற்கிறோம்.  புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய திருமாலை வேண்டி விரதம் இருப்பதால் சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள்…

மகாளய பட்சம் : வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் என்னென்ன நன்மைகள் நம்மை சேரும்

பித்ரு தோஷத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த மகாளய புண்ணிய காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெற்றுக்கொள்ளுங்கள். சுபகாரியத் தடை, மகப்பேறின்மை, தொடரும் விபத்துக்கள், தீராத நோய் இவற்றுக்கெல்லாம் பித்ரு தோஷமும் ஒரு முக்கிய காரணமாகும். முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். “மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது” என்பது பழமொழி. திருமணப் பிராப்தி அதாவது கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும். பொதுவாக ஒவ்வொரு…

மஹாளய பட்சத்தில் சிறக்கும் மஹாவ்யதீபாதம் 28.09.2021 – செவ்வாய்கிழமை

புரட்டாசி மாதம் என்றாலே விரதத்திற்கு உரிய புண்ணியமாதம் என்பதை அனைவரும் அறிவோம். இம்மாதத்தில் க்ருக்ஷ்ணபக்ஷ (தேய்பிறை) பிரதமை தொடங்கி அமாவாசை முடிய உள்ள பதினைந்து நாட்களும் ‘மஹாளய பக்ஷம்’ என வழங்கப் பெறுகின்றன. தென்புலத்தார் எனப்பெறும் பித்ருலோகத்தினைச் சார்ந்த நமது முன்னோர்கள் (வருடந்தோறும்) இந்த 15 நாட்களும் நம்மைச் சமீபித்து இருப்பதாக சாஸ்திரங்கள் பகர்கின்றன. அந்தந்த இல்லத்தார் சம்பிராதாயப்படி மறைந்த இல்லத்துப் பெரியவர்களுக்கு உரிய திதியில் மற்ற பந்துக்களுக்கும் சேர்த்து (எள் + ஜலம்) அர்க்யம் விடுவதன்…