புரட்டாசி சனிக்கிழமை படையல்

புரட்டாசி பெருமாள் தளிகை

புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமையில் ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு படைப்பது தளியல் ஆகும். வடு வாசலை சுத்தம் செய்து பூஜை அறையில் விளக்கேற்றி படைக்கும் இடத்தில் படையல் கோலம் போட வேண்டும். தளியலுக்கு தேவையான அக்கார அடிசில், எள்ளோதரை, புளி சாதம், மிளகு சாதம், தயிர் சாதம், வடை, கடலை, வாழைக்காய் பொரியல் ஆகிய நைவேத்யங்கள் தயார் செய்ய வேண்டும்.

குத்து விளக்கின் ஐந்து முகங்களையும் நெய் தீபம் ஏற்றி கோலத்தின் இருபுறமும் வைக்க வேண்டும். குத்து விளக்கிற்கு குங்குமம் வைத்து துளசி மாலை அணிய வேண்டும். மூன்று நுனி வாழை இலைகள் விளக்கிற்கு முன்புறம் போட்டு நைவேத்யங்கள் பிரிமார வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் துளசியை கலந்து வைக்கவும்.

தேங்காய், வாழைப்பழம்,பூ, வெற்றிலை, பாக்கு, சூடம் விபூதி குங்குமம் இவைகளை தட்டில் வைத்து தூப தீப ஆராதனை செய்து பெருமாளை கோவிந்தா கோவிந்தா என்ற நாமத்துடன் புரட்டாசி சனிக்கிழமை ஸ்ரீ வெங்கடேச பெருமாளை வழிபடுவது நல்லது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *