திருப்பாவை பாடல் 3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்துஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகளபூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பதேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றிவாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய். பொருள்: சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த…

திருப்பாவை பாடல் 2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்பையத்துயின்ற பரமன் அடிபாடிநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிஉய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய். பொருள்: திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக்கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட…

திருப்பாவை பாடல் 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான்பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும்…

ஆண்டாள் அருளிய திருப்பாவை

“மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று கண்ணபிரான் கீதையில் மொழிந்துள்ளார். மார்கழி மாதம் இவ்வாறு சிறப்பு மிக்கதாக இருக்கவும், நாட்டுப்புறங்களில் மார்கழி மாதத்தை பீடை மாதம் என்று சொல்லி மங்கள வினைகளை எதனையும் ஆற்றாமல் தவிர்த்து வருகிறார்கள். ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்’ என்ற திருப்பாவை தொடங்குகின்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்கொடியாம் ஆண்டாள், ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஆவர். “மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்று திருவரங்கத் துறை திருவரங்க நாதரையே…

Tamil Daily Panchangam Date 27-11-2021

27-11-2021 அன்றைய தினத்தின் திதி, நட்சத்திரம் பற்றிய குறிப்புகளுடன் கிரகங்களின் கோச்சார நிலைகளும் தமிழில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பிருகு-நந்தி நாடி முறையில் குரு பெயர்ச்சியின் பலன்கள்

பிருகு-நந்தி நாடி முறையில் குரு பெயர்ச்சியின் பலன்கள் பின்வருமாறு ஒரு ராசிக்கு 5 மற்றும் 9ம் ராசிகள் ஒரே திசையை குறிக்கும். ஒரு ராசிக்கு 3,7, & 11ம் ராசிகள் எதிர் திசையை குறிக்கும். ஒரு காரக கிரகம் அமர்ந்து ராசிக்கு 2 மற்றும் 12ம் ராசிகளை பார்வையிடும். இது ஜெயமுணி சூத்திரத்திலும் உள்ளது. எனவே ஒரு காரக கிரகம் அமர்ந்த ராசிக்கு 1-5-9-3-7-11-2 மற்றும் 12ல் அமர்ந்த கிரகங்கள் இணைந்து செயலாற்றுகின்றன என்பது நாடி ஜோதிடத்தின்…

Tamil Daily Panchangam Date 26-11-2021

26-11-2021 அன்றைய தினத்தின் திதி, நட்சத்திரம் பற்றிய குறிப்புகளுடன் கிரகங்களின் கோச்சார நிலைகளும் தமிழில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Tamil Daily Panchangam Date 25-11-2021

25-11-2021 அன்றைய தினத்தின் திதி, நட்சத்திரம் பற்றிய குறிப்புகளுடன் கிரகங்களின் கோச்சார நிலைகளும் தமிழில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Tamil Daily Panchangam Date 18-11-2021

18-11-2021 அன்றைய தினத்தின் திதி, நட்சத்திரம் பற்றிய குறிப்புகளுடன் கிரகங்களின் கோச்சார நிலைகளும் தமிழில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

விஷ்ணுபதி புண்ணிய காலம்

அக்ஷய ஜோதிட வித்தியாலயத்தின் கோவை மையத்தின் அஸ்ட்ரோ ஜ்வாலா வழங்கும் ஸ்ரீ விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹நெஞ்சுக்கு நிம்மதி! ஆண்டவன் சன்னதி!! நினைத்தால் எல்லாம், விஷ்ணுபதி புண்ணிய காலத்திலே……..🙏🙏* 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பது சூரிய பகவான் ஸ்திர ராசிகளில் சஞ்சரிக்கும் முதல் நாளாகும். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர ராசிகளில் சூரியன் சஞ்சரிக்கின்ற முதல் நாளே ஸ்ரீ விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். இந்த நான்கு நாட்கள் மட்டுமே ஒவ்வொரு தமிழ் வருடத்திலும்…