பிருகு-நந்தி நாடி முறையில் குரு பெயர்ச்சியின் பலன்கள்

பிருகு-நந்தி நாடி முறையில் குரு பெயர்ச்சியின் பலன்கள் பின்வருமாறு

ஒரு ராசிக்கு 5 மற்றும் 9ம் ராசிகள் ஒரே திசையை குறிக்கும். ஒரு ராசிக்கு 3,7, & 11ம் ராசிகள் எதிர் திசையை குறிக்கும். ஒரு காரக கிரகம் அமர்ந்து ராசிக்கு 2 மற்றும் 12ம் ராசிகளை பார்வையிடும். இது ஜெயமுணி சூத்திரத்திலும் உள்ளது. எனவே ஒரு காரக கிரகம் அமர்ந்த ராசிக்கு 1-5-9-3-7-11-2 மற்றும் 12ல் அமர்ந்த கிரகங்கள் இணைந்து செயலாற்றுகின்றன என்பது நாடி ஜோதிடத்தின் அடிப்படை விதி.

இப்பொழுது குரு மகரத்திலிருந்து கும்பத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். எனவே கும்பத்தில் அமரும் கோச்சார குரு, ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் உள்ள 1-5-9-3-7-11-2-12 ல் அமர்ந்து கிரகங்களோடு தொடர்பு கொள்வார்.

நாடி முறையில் மற்றொரு விதி என்னவென்றால், ஜனன கால ஜாதக ம் யோகங்களை நிர்ணயிக்கிறது. யோகங்கள் நிறைவேற கோட்சார கிரகங்கள் உறுதுணையாக இருக்கிறது என்பதாகும்.

இப்பொழுது கும்பத்தில் உள்நுழைய விருக்கும் கோச்சார குரு, ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் கும்பம் மிதுனம் துலாம் மேஷம் சிம்மம் தனுசு மீனம் மற்றும் மகரத்தில் அமர்ந்த கிரகங்களோடு தொடர்புகொள்வார்.

  1. பிருகு நந்தி நாடியில் கோச்சார கிரகங்களின் வலிமை:
    ஒரு கோச்சார கிரகம்,
    ஜனன ஜாதகத்தில் யோக கிரகம் அமர்ந்துள்ள அதே ராசியில் பிரவேசிக்கும் பொழுது – 100%
  2. கோச்சார கிரகம், ஜனன ஜாதகத்தில் உள்ள கிரகத்திற்கு 2,5 அல்லது 9ம் ராசிகளில் பிரவேசிக்கும் பொழுது – 75%

3) கோச்சார கிரகம், ஜனன ஜாதகத்தில் உள்ள கிரகத்திற்கு 3,7 அல்லது 11ம் ராசிகளில் பிரவேசிக்கும் பொழுது – 50%

4) கோச்சார கிரகம், ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரகத்திற்கு 12ம் ராசியில் பிரவேசிக்கும் பொழுது – 25%

கிரகங்களின் வலிமையை பொருத்து கிரகங்களின் அமர்வை, 1-2-5-9-3-7-11 முறையே அடக்கிக் கொள்ளலாம்.

கோச்சார பலன்கள் ஒவ்வொரு தனி மனிதருக்கும், ஜனன கால ஜாதக கிரகங்கள் அமர்ந்த நிலையைப் பொறுத்து மாறுபடும்.

இனி கோச்சார குருவின் பலன்களை பிருகு நந்தி நாடி முறையில் பார்க்கலாம்

சூரியன் :
ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் சூரியன்,

கும்பம், மீனம், மிதுனம், துலாம், மேஷம், சிம்மம், தனுசு மற்றும் மகரத்தில் அமர்ந்திருப்பேன், கீழ்கண்ட பழங்களில் ஒன்றோ அல்லது பலவோ கிடைக்கும்:

1) புகழ், கீர்த்தி, அந்தஸ்து உண்டாகும்
2) பெரிய மனிதர்கள், மேன்மையானவர்களின் உதவி கிடைக்கும்.
3) அரசாங்க ஆதரவு கிடைக்கும்
4) ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். ஆண் குழந்தை பிறப்பு.
தந்தை: பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். சுற்றத்தாரின் உதவிகளை பெறுவார்.
5) உத்தியோக உயர்வு, ஆகியவை ஏற்படும்.

சந்திரன்
ஒருவருடைய ஜெனன கால ஜாதகத்தில் சந்திரன்,
கும்பம், மீனம்,மிதுனம், துலாம், மேஷம், சிம்மம், தனுசு மற்றும் மகரத்தில் அமர்ந்திருப்பின்

கீழ்க்கண்ட பலன்களில் ஒன்றோ அல்லது பலவோ விளையும்:

  1. எதிரிகளால் குற்றம் சுமத்த படுவார்.
  2. எதிர் பாலரை சந்திப்பார். பிரயாணங்கள் மேற்கொள்வார்.
  3. கற்பதில் விருப்பம் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும்.
  4. சீதள நோய் உண்டாகும். மறைமுக விரோதிகளால் தொல்லை.
  5. பெண் குழந்தை பிறப்பு
  6. தாயாருக்கு சுகவீனம் ஏற்படும். தாயார் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்வார்.

செவ்வாய்

ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் செவ்வாய்

கும்பம் ,மீனம் ,மிதுனம், துலாம், மேஷம், சிம்மம், தனுசு மற்றும் மகரத்தில் அமர்ந்திருப்பேன் கீழ்கண்ட பழங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பலன்களை அடைவார்

1) திருமணம் ஆகாமல் இருந்தால் பெண்களுக்கு திருமணம்.
2) வீண் பிடிவாதம், வெறுப்புணர்வு, உஷ்ணத்தால் ரத்த அழுத்தம் ஏற்படும்.
3) அறுவை சிகிச்சை.
4) கட்டுமானம் அல்லது தொழில் நுட்பம் சார்ந்த வகைகளில் வெற்றி உண்டாகும்.
5) எதிரிகள் தொல்லை ஏற்படும்.
6) சுற்றத்தாரை சந்திப்பார்
7) தன்னுடைய குடும்பத்தாரை விட்டு தூரத்தில் இருப்பார்
8) வீடு வாங்குவார். அந்தஸ்து ஏற்படும்.
9) பெண் ஜாதகர் எனில் நல்ல காலம் ஏற்படும். கணவர் பல வகைகளிலும் முன்னேற்றம் காண்பார்.
10) சகோதரர்கள் பெருமை படும் படியாக இருப்பார்கள். அவர்களுக்கு இது நல்ல காலம்.

புதன்

ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் புதன்

கும்பம், மீனம், மிதுனம், துலாம், மேஷம், சிம்மம், தனுசு மற்றும் மகரத்தில் அமர்ந்திருப்பேன் கீழ்கண்ட பலன்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பலன்களை அடைவார்

1) கல்வியில் வெற்றி உண்டாகும்.
2) சான்றோர்களின் நட்பு கிடைக்கும்.
3) ஆன்மிக அறிவு ஏற்படும்.
4) புதிய அனுபவங்கள், புனிதப் பயணங்கள் ஏற்படும்
5) பெண் நண்பர்களை சந்திப்பார்கள்.
6) நிலத்தில் வருவாய் கிடைக்கும். நிலம் வாங்குவார் வீடு கட்டுவார்.

குரு

ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் மேற்கண்ட ராசிகளில் குரு இருப்பவர் ஆனால்

1) புகழ் கீர்த்தி கௌரவம் ஆன்மீக ஈடுபாடு ஏற்படும்
2) தன்னுடைய வளர்ச்சியில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார்
3) ஆண் குழந்தை பிறக்கும். மனத் திருப்தி ஏற்படும்.

சுக்கிரன்

ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் சுக்கிரன் மேற்க்கண்ட ராசிகளில் சுக்கிரன் இருப்பவர் ஆனால்

1) ஆணுக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் திருமணம் ஆகும்.
2) பெண் குழந்தை பிறப்பு
3) சொத்துக்கள் பொருட்கள் கிடைக்கும். லாபம் பெறுவார்
4) ஆடம்பரப் பொருட்கள் வாங்குவார். சுப கொண்டாட்டங்கள்
5) மகிழ்ச்சியான முன்னேற்றம் உண்டாகும்
6) பெண்களால் லாபம் கிட்டும்
7) குடும்பத்தில் சில சச்சரவுகள் ஏற்படும்
8) மனைவிக்கு இது நல்ல காலம்.
9) சுக்கிரனுக்கு 7இல் யோகம்
குறிப்பு – ராகுவின் தொடர்பு சுக்கிரனுக்கு ஏற்படுமானால் மாளிகைகளும் ரகசியமான சம்பாத்தியமும் அதிகம் கிடைக்கும்.

சனி

ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் மேற்க்கண்ட ராசிகளில் சனி இருப்பவர் ஆனால்

1) வேலை கிடைத்தல்.
2) உத்யோக உயர்வு
3) வேலை மாற்றம். நல்ல பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

ராகு

ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் மேற்கண்ட ராசிகளில் ராகு இருப்பவர் ஆனால்

1) கல்வியில் தடை
2) அறுவை சிகிச்சை. கருசிதைவு ஏற்படும். மனக்கலக்கம்.
3) விபத்து. உறவினர் மரணம், மனக்கலக்கம் ( ராகு + சனி) முதலியவைகளை அனுபவிப்பார்.

குறிப்பு – ஜெனன ஜாதகத்தில் ராகு நல் அமைவு பெற்றிருப்பின் வசதிகளையும் உலகத்திலுள்ள அனைத்து இன்பங்களையும் ஜாதகர் பெறுவார்.

கேது

ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் கேது மேற்க்கண்ட ராசிகளில் இருப்பவர் ஆனால்

1) ஆன்மீக ஈடுபாடு, தீர்த்த யாத்திரை.
2) வழக்கு, போட்டிகளில் வெற்றி.
3) மன நிம்மதி. சற்று சுகவீனம் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *