சகலமும் கைகூடும் சோடசக்கலை – ஆவணி மாதம்

சோடசக்கலை நேரம் என்பது அகத்தியர் அருளியது. திதிகள் 15 உள்ளன. வளர்பிறை திதி 15 தேய்பிறை திதி 15 இதனை கலை என்றும் சொல்லலாம்.
இதில் பதினாறாவதாக உள்ள திதிதான் சோடசக்கலை. இது 5 சொடக்கு போடும் நேரமே இருக்குமாம். இந்த நேரம் திருமூர்த்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த பூஜை செய்வதன் மூலம் குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும்.

அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும், பவுர்ணமி முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும் 16வதாக வரும் சோடசக்கலை நேரம் அற்புதமான நேரம் உள்ளது. இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும்.

சோடசக்கலை நேரம் என்பது ஆவணி 29 (15/09/2023) வெள்ளிக்கிழமை காலை 06.24 Am லிருந்து 08.00Am மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும் நினைத்தது நிறைவேறும். அஷ்ட லட்சுமியின் அருளோடு செல்வ வளம் பெருகும்.

பூஜை அறையில் சுத்தமான ஆசனத்தை விரித்து அமைதியாக வடகிழக்கு திசையைப் பார்த்து கண்களை மூடி அமரவேண்டும். நம்முடைய தேவையை என்னவோ அதை நினைத்து தியானத்தில் இருக்க வேண்டும். இந்த தியானத்தை ஜாதி, மதம் கடந்து யார் வேண்டுமானாலும் செய்யலாம். நோய் தீர, கடன் தீர, வம்பு வழக்குகள் தீர, பிரிந்த தம்பதியர் சேர என எதை நினைத்து வேண்டுமானாலும் தியானம் செய்யலாம்.

இந்த நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும் நினைத்தது நிறைவேறும். வீடு, பங்களா, கார், பணம், வேலை, காதல், திருமணம் என உங்களுக்கு என்ன விருப்பமோ, நல்லதாக நினைத்து மனதார வேண்டுங்கள். நினைத்தது நிறைவேறிய உடன் அடுத்ததை நினைத்து தியானம் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *