Remedy for Ubaya Lagnam – உபய லக்ன பாதகாதிபதி பரிகாரம்

உபய லக்ன பாதகாதிபதி பரிகாரம்

பொதுவாக 7 ஆம் இடம் என்பது ஒருவருக்கு வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையைத் தரக்கூடிய திருமணம், நண்பர்கள், சம்பந்தி, பொது ஜன தொடர்பு போன்றவற்றை குறிப்பிடக் கூடிய பாவகமாக அமைகிறது.

ஆனால் உபய லக்கின ஜாதாகர்களுக்கு 7 ம் இடம் என்பது இயல்பாகவே பாதாகத்தை தரக்கூடிய ஸ்தானமாகவும் அமைகிறது.

எனவே உபய லக்கின ஜாதகர்கள் 7 ம் இட பாவக காரகத்துவங்களால் பாதாகத்தையும் சந்திக்க நேரிடும். எனவே அதற்கு பரிகாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • திருமணத்திற்கு பெண் பார்க்க அல்லது மாப்பிள்ளை பார்க்க செல்லும் போது கையில் வெற்றிலை, பாக்கு வைத்துக் கொண்டு பேசினால் நிச்சயம் வெற்றி உண்டாகும்.
  • கூட்டுத் தொழில் விஷயமாக எது பேசினாலும், எந்த செயல் செய்ய தொடங்கினாலும் கையில் வெற்றிலை பாக்கு வைத்துக் கொண்ட பேச வெற்றி ஏற்படும்.
  • வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு வெற்றிலை பாக்கு வைத்து தாம்பூலம் கொடுப்பது சிறந்தது.
  • ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு மாலை சாற்றி வழிபட வேண்டும். (ஏனெனில் கால புருஷனுக்கு ஏழாம் வீடான துலாம் சுக்கிரன் வீடு என்பதால்)
  • அதே போல பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதும் மிக சிறப்பான பலனை தரும். ஏனெனில் காலுக்கு காரக கிரகமான சனி கால புருஷனுக்கு ஏழாம் வீடான துலாமில் உச்சமடைவதால்.
  • திருமானத்திற்கு பின்பு சம்பந்திக்கு வாழை இலை போட்டு விருந்து சாப்பாடு பரிமாறுவது சிறந்த பரிகாரம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *