பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாமா?

நம்மில் பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கும். பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாமா?? கூடாதா? வைப்பதால் நன்மைகள் உண்டாகுமா? போன்ற சந்தேகங்கள் நமது வாசகர்கள் பலரிடம் இருந்து எழுப்பபட்டுள்ளது. உங்களுடைய சந்தேகங்களுக்கு ஆன விளக்கம் இதோ.

  • பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாம். கண்ணாடி என்பது எதையும் பிரதிபலிக்கக் கூடிய ஒன்று. பூஜை அறையில் உள்ள நல்ல சக்திகளை அது பிரதிபலித்து நமக்கு நன்மையை கொடுக்கும்.
  • அதனால்தான் கோவில்களில் கர்ப்ப கிரகத்தில் இருக்கும் மூலவருக்கு எதிரில் கண்ணாடி வைக்கப்பட்டு கோவிலில் உள்ள நல்ல சக்திகளை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வைக்கப்படுகிறது
  • சில கோவில்களில் மூலவருக்கு பின்னால் ஒரு சின்ன சிறிய கண்ணாடி ஒன்றை வைத்து தீப ஒளி அதில் படும்படி அமையப்பெற்றுள்ளது.
  • ஒரு விளக்கில் ஏற்படும் ஒளியை அந்தக் கண்ணாடி பல மடங்காக நமக்கு காட்டுகிறது.
  • அதிக நல்ல அதிர்வுகளையும் சக்தியையும் அங்கு வரும் பக்தர்களுக்கு அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது

எனவே நீங்கள் தாராளமாக உங்களது பூஜை அறையில் கண்ணாடி வைப்பதில் தவறேதும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *