நவராத்திரியின் ஒன்பாதம் நாள்

ஒன்பதாம் நாள் சாமுண்டியாக தோற்றம் கொள்கிறாள் அன்னை. இன்றைய தினம் பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம். தாமரை மலர்களால் அலங்கரித்து வசந்தா ராகம் இசைக்கலாம்.

நவராத்திரியின் எட்டாம் நாள்

எட்டாம் நாளில் நரசிம்ஹி ரூபத்தில் காட்சி தருகிறாள் அம்பிகை. இவளுக்கு உகந்த ரோஜா மலரை சூடி, புன்னக வராளி இசைக்கலாம். சர்க்கரை பொங்கல் தேவிக்கு உகந்தது.

நவராத்திரியின் ஏழாம் நாள்

ஏழாம் நாளில் சரஸ்வதியாக அருள் தரும் அன்னைக்கு தாழம்பூ சூடி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்து, பிலஹரி ராகம் பாடலாம்.

நவராத்தியின் ஆறாம் நாள்

ஆறாம் நாள் இந்திராணியாக காட்சியளிக்கும் தேவிக்கு ஜாதி மலரே உகந்தது. இவள் விரும்புவது நீலாம்பரி ராகமும், தேங்காய் சாதமுமே.

நவராத்தியின் ஐந்தாம் நாள்

ஐந்தாம் நாளில் வைஷ்ணவி ஆகிறாள் அம்பிகை. முல்லைப்பூ அலங்காரமும் தயிர் சாதமும் இவளுக்கு ஏற்றவை. பந்து வராளி ராகப்பாடல்கள் பாட வேண்டும்.

நவராத்திரியின் நான்காம் நாள்

நான்காம் நாள் மகாலட்சுமியாக காட்சியளிக்கிறாள் தேவி. மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து, அன்னம் நைவேத்தியம் பண்ண வேண்டும். இவளுக்கு உகந்தது பைரவி ராகம்.

நவராத்திரியின் இரண்டாம் நாள்

இரண்டாம் நாளன்று கௌமாரி ரூபத்தில் இருப்பவளுக்கு முல்லை, துளசியால் அலங்காரம் செய்து புளியோதரை நிவேதனம் பண்ண வேண்டும். இன்றைய தினம் கல்யாணி ராகமே அவளுக்கு சிறந்தது.

நவரத்தியின் முதல் நாள்

நம்மை பெற்றவளை நாம் அம்மா என அழைக்கிறோம். அப்பாவின் பார்வையில் அம்மாவானவள் மனைவி. தாத்தா பாட்டிக்கு அவளே மகள். சித்தி மாமாவிற்கு சகோதரி. இன்னும் மருமகளாக, அண்ணியாக எத்தனையோ உறவுகளின் பெயரால் அம்மா அழைக்கப்படுகிறாள். உறவுமுறை வெவ்வேறாக இருந்தாலும் நபர் ஒன்றுதான். கடவுள்கள் விஷயத்திலும் இந்த ஃபார்முலாவே பயன்படுத்தப் படுகிறது. தீமையை அழித்து நன்மையை கொடுக்கும் வகையில் சக்தி பல்வேறு ரூபங்களை எடுக்கிறாள். மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என…

நவராத்திரி பிரசாதங்கள் – Navarathri Prasadam

🕉நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் எந்தெந்த பிரசாதம் செய்ய வேண்டும்? அதனால் உண்டாகும் பலன்கள் என்ன தெரியுமா? 🔔✡🕉 நவராத்திரி பண்டிகை 9 நாட்களும் ஒவ்வொரு விதமான பிரசாதங்களை வைத்து படைக்க வேண்டும். நவக்கிரக பலன்களைக் கருதி, அந்தந்த கிழமைக்கேற்ப நவதானியங்களில் ஏதேனும் ஒன்றைச் சுண்டலாகச் செய்து, வெற்றிலை பாக்குடன் விநியோகிப்பது நல்லது. முதல் நாள்: வெண்பொங்கல், மொச்சை சுண்டல் பிரசாதமாகக் கொடு ப்பது உகந்தது. இதன்மூலம் வறுமை நீங்கி, வளம் பெருகும். ஆயுள் விருத்தி உண்டாகும். இரண்டாம்…