மகாளய பட்சம் : வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் என்னென்ன நன்மைகள் நம்மை சேரும்

பித்ரு தோஷத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த மகாளய புண்ணிய காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெற்றுக்கொள்ளுங்கள். சுபகாரியத் தடை, மகப்பேறின்மை, தொடரும் விபத்துக்கள், தீராத நோய் இவற்றுக்கெல்லாம் பித்ரு தோஷமும் ஒரு முக்கிய காரணமாகும். முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். “மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது” என்பது பழமொழி. திருமணப் பிராப்தி அதாவது கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும். பொதுவாக ஒவ்வொரு…