காரடையான் நோன்பு -அடை செய்யும் முறை

தேவையான பொருட்கள்வறுத்த பச்சரிசி மாவு 1 கப்காராமணி 1/4 கப்தேங்காய் சிறிய பற்களாக கீரியது – அரை கப்வெல்லம் [பொடித்தது] 1 கப்ஏலக்காய் தூள் 1 டீ ஸ்பூன்தண்ணீர் 2 கப் அடை செய்முறை: காராமணியை வேகவிட்டு வடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை போட்டு கொதிக்கவிடவும். வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் “தள தள’ என்று கொதிக்கும் போது காராமணி, தேங்காய் துண்டுகள், ஏலப்பொடி சேர்க்கவும்.…

மஞ்சள் கயிற்றை கட்டிக் கொள்ளும்பொழுது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தோரம் கிருஷ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராமி அஹம்!பர்த்து: ஆயுஷ்ய ஸித்யர்த்தம் ஸுப்ரீதாபவ ஸர்வதா பலன்: காரடையான் விரதம் இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர்.

காரடையான் நோன்பு விரதமுறை

விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி சிறிய கோலமிட வேண்டும். அதன் மீது நுனி வாழை இலை போட்டு இரண்டு அடையும், உருக்காத வெண்ணையும் வைக்க வேண்டும். இலையின் ஓரத்தில் வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப்பழம் வைக்க வேண்டும். அதன் மீதே நோன்புக் கயிற்றையும், புது தாலிச் சரடையும் வைக்க வேண்டும். அதன் முன் அமர்ந்து இலையைச் சுற்றி நீர் தெளித்து நிவேதனம் செய்ய வேண்டும். பின்னர் நோன்பு சரடை பெண்கள் தாங்களாகவே தங்கள் கழுத்தில்…

காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு 14.03.22 திங்கட்கிழமை இரவு 11.36 அனுஷ்டிக்க வேண்டும். மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக்காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே…