மஹாளய பட்சத்தில் சிறக்கும் மஹாவ்யதீபாதம் 28.09.2021 – செவ்வாய்கிழமை

புரட்டாசி மாதம் என்றாலே விரதத்திற்கு உரிய புண்ணியமாதம் என்பதை அனைவரும் அறிவோம். இம்மாதத்தில் க்ருக்ஷ்ணபக்ஷ (தேய்பிறை) பிரதமை தொடங்கி அமாவாசை முடிய உள்ள பதினைந்து நாட்களும் ‘மஹாளய பக்ஷம்’ என வழங்கப் பெறுகின்றன. தென்புலத்தார் எனப்பெறும் பித்ருலோகத்தினைச் சார்ந்த நமது முன்னோர்கள் (வருடந்தோறும்) இந்த 15 நாட்களும் நம்மைச் சமீபித்து இருப்பதாக சாஸ்திரங்கள் பகர்கின்றன. அந்தந்த இல்லத்தார் சம்பிராதாயப்படி மறைந்த இல்லத்துப் பெரியவர்களுக்கு உரிய திதியில் மற்ற பந்துக்களுக்கும் சேர்த்து (எள் + ஜலம்) அர்க்யம் விடுவதன்…