திருப்பாவை பாடல் 15

எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுகஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையைஎல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்கவல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய். பொருள்: ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ…

திருப்பாவை பாடல் 14

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய். பொருள்: எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த…

திருப்பாவை பாடல் 13

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனைகிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுபுள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதேபள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய். பொருள்: பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன் மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே, நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகி விட்டது.…

திருப்பாவை பாடல் 12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கிநினைத்து முலைவழியே நின்றுபால் சோரநனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றிசினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்றமனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய். பொருள்: பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு…

திருப்பாவை பாடல் 11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்துசெற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியேபுற்றரவு அல்குல் புனமயிலே போதராய்சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாடசிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீஎற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய். பொருள்: கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே! புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே! நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத்…

திருப்பாவை பாடல் 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். பொருள்: முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக் கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம்…

திருப்பாவை பாடல் 9

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியதூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றுநாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய். பொருள்: பிரகாசமான நவரத்தினங் களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய, நறுமணதிரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை…

திருப்பாவை பாடல் 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடுமேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னைகூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடையபாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டுமாவாய் பிளந்தானை மல்லரை மாட்டியதேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். பொருள்: மகிழ்ச்சியை மட்டுமே சொத்தாகக் கொண்டவளே! அழகுச்சிலையே! கிழக்கே வெளுத்து எருமைகள் மேய்ச்சலுக்காக புல் மைதானங்களில் நிற்கின்றன. எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து விட்டார்கள். அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். ஆனாலும் உனக்காக தடுத்து…

திருப்பாவை பாடல் 7

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்துபேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்துவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்திகேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய். பொருள்: அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில்…

திருப்பாவை பாடல் 6

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டுகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சிவெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினைஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் பொருள்: அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக்…