பள்ளியறை பூஜை செய்யும் முறை விஷேச தகவல்கள்

இரவுக் கால பூஜை சிவாலயத்தில் நிறைவு ஆனப் பின்னர்,ஈசனுடைய திருப்பாதத்திற்கு உரிய அலங்காரம் செய்ய வேண்டும்;அந்த அலங்காரம் செய்த திருப்பாதத்தை பல்லக்கில் வைத்து கோவிலுக்குள் வலம் வர வேண்டும்;அப்படி வலம் வரும் போது, நாதஸ்வரம், சங்கு,உடுக்கை, பேரிகை, துந்துபி, மத்தளம் மற்றும் திருக்கையிலாய வாத்தியம் என்று அழைக்கப்படும் பஞ்சவாத்தியங்கள் இசைக்க வேண்டும்; இவைகளை யார் ஒருவர் சம்பளம் வாங்காமல் ஒரு பிறவி முழுவதும் இசைக்கின்றார்களோ,அவர்களே சிவலோகம் என்று அழைக்கப்படும் திருக்கையிலாயத்தில் இசைக்கும் கணங்களாக பொறுப்பேற்கின்றார்கள்; ஒவ்வொரு தினமும்…