ரோகிணி நட்சத்திரம் – Rohini natchaththiram

ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தனது அழகாலும், திறமையாலும் மற்றவர்களை எளிதில் கவர்ந்து விடுவார்கள். மென்மையான குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். எதிலும் சுயமாக சிந்தித்து முடிவெடுப்பார்கள். பாசமுள்ளவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் விளங்குவார்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். சிறந்த கற்பனை வளமும், படைப்பாற்றல் திறன் இருக்கும். சில சமயங்களில் மன சஞ்சலங்களால் அமைதியை இழந்து தவிப்பார்கள். கடினமாக உழைக்கும் திறன் கொண்டவர்கள். எந்தத் தவறுகளையும் பொறுத்துக் கொள்ளும் சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். பரோபகார மனம் கொண்டவர்கள். பாரம்பரியமான சிந்தனைகளைக் கொண்டிருந்தாலும், நவீனத்தையும் விரும்புவார்கள்.…