மூலம் நட்சத்திரம் பொது பலன்கள்

மூலம் நட்சத்திரம் வாயு மைந்தனான ஸ்ரீ ஆஞ்சநேயரின் நட்சத்திரமாகும். இதில் பிறந்தவர்கள் ஒழுக்கசீலர்களாக இருப்பார்கள். இல்லறத்திலும் சரி, ஆன்மீகத்திலும் சரி தங்களது கடமைகளை சரிவர நிறைவேற்றுவார்கள். இவர்களது நற்குணங்களால் பெயரும், புகழும் அடைவார்கள். தீவிர கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பார்கள். எந்த சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவார்கள். சிறிய வயதிலேயே நல்ல உடல்வாகும், பேச்சாற்றலும் உள்ளவர்களாக இருப்பார்கள். வரவுக்கு மேல் செலவு செய்வார்கள். இதனால் பல பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வரும்.…