மகம் நட்சத்திரம் – Magam Natchaththiram

மகம் ஜெகத்தை ஆளும் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் எல்லோருக்கும் அந்த யோகம் அமைந்துவிடுவதில்லை. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் தனித்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சுதந்திர மனப்போக்கைக் கொண்டிருப்பார்கள். தங்களுடைய விஷயங்களில் மற்றவர்கள் ஈடுபடுவதை விரும்பமாட்டார்கள். எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டவர்களாக இருப்பார்கள். கடவுள் மேல் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். எந்த காரியத்தை எடுத்துக் கொண்டாலும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பார்கள். எப்போதும் உண்மையே பேசுபவர்கள். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமிருக்கும் என்பார்கள். அது போல்…