மீனத்தில் குரு இருக்கும் ஆண்கள் எப்படிப்பட்டவர்கள்?

குரு மீனத்தில் இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள் எளிமை, அழகு உடையவர், பொறுமை ஆனவர், அன்பு, கருணை, இரக்கம் உடையவர். வெகு செலவாளி. இரட்டை குணமுடையவர். பாச உணர்வு உடையவர். நிர்வாகத் திறமை உடையவர். அழகை ஆராதிப்பவர். தென்வடல் வீதியில் மேற்கு வாசல் வீட்டில் ஜெனித்தவர்.

கும்பத்தில் குரு இருக்கும் ஆண்கள் எப்படிப்பட்டவர்கள்?

குரு கும்பத்தில் இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்: சுயநலம் மிகுந்தவர். கௌரவம், புகழ், லாபம் இவற்றை விரும்புபவர். அறிவாற்றல் உடையவர். நிர்வாகத் திறமை கொண்டவர். ஆன்மீக ஈடுபாடு, சமுதாயப் பணி, அரசியல் ஈடுபாடு உடையவர். கிழமேல் வீதியில் தெற்கு வாசல் வீட்டில் ஜெனித்தவர்.

மகரத்தில் குரு இருக்கும் ஆண்கள் எப்படிப்பட்டவர்கள்?

குரு மகரத்தில் இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்: கருப்பு நிறம் கொண்டவர். அலட்சிய சுபாவமும், மந்தமும் உடையவர். எவருடனும் ஒட்டாமல் வாழ்பவர். உடலுக்கு ஊறு விளைவிக்கும் பழக்கங்களை உடையவர். தென்வடல் வடக்கு வீதியில் கிழக்கு நோக்கிய வீட்டில் பிறந்தவர்.

தனுசில் குரு இருக்கும் ஆண்கள் எப்படிப்பட்டவர்கள்?

குரு தனுசில் இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்: கௌரவமான மதிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர். நற்குணங்களும், அமைதியும் நிரம்பியவர். நல்லவை களுக்காக கோபம் கொள்பவர். திறமை, அறிவு, புகள் உடையவர். கிழமேல் வீதியில் வடக்கு நோக்கிய வீட்டில் பிறந்தவர்.

விருச்சகத்தில் குரு இருக்கும் ஆண்கள் எப்படிப்பட்டவர்கள்?

குரு விருச்சகத்தில் இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்: நல்ல உயரம் கொண்டவர். சிவப்பு நிற மாணவர். அங்கங்களில் தழும்பு உடையவர். சுறுசுறுப்பானவர். தைரியமானவர். சுயநலம் பேணுபவர். முன்கோபம், பிடிவாதம், ஆத்திரம் உடையவர். உடலில் உஷ்ணம் அதிகம் உடையவர். மற்றவரை உதாசீனப்படுத்துவதிலும், படைத்தலும் உடையவர். தென்வடல் வீதியில் மேற்கு நோக்கிய வீட்டில் பிறந்தவர்.

துலாமில் குரு இருக்கும் ஆண்கள் எப்படிப்பட்டவர்கள்?

குரு துலாமில் இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்: அழகான அங்க லட்சணங்கள் அமைய பெறுவார். ஆடை ஆபரண அலங்காரப் பிரியர். சௌந்தர்யரூபம். உல்லாச வாழ்க்கையில் விருப்பம் உண்டாகும். மென்மையானவர். செல்வ விருத்தி பெறுவார். கிழமேல் வீதியில் தெற்கு வாசல் வீட்டில் ஜெனித்தவர்.

கன்னியில் குரு இருக்கும் ஆண்கள் எப்படிப்பட்டவர்கள்?

கன்னியில் குரு இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்: அறிவில் சிறந்தவர். நுட்பமான ஆற்றல்களை திறனாக பெற்றுள்ளார். எழுத்து, கலை, இலக்கியங்களில் ஆர்வம் மிக்கவர். இனிமையாக பேசுபவர். தென்வடல் வீதியில் கிழக்கு வாசல் வீட்டில் ஜெயித்தவர்.

சிம்மத்தில் குரு இருக்கும் ஆண்கள் எப்படிப்பட்டவர்கள்?

சிம்மத்தில் குரு இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்: பாரம்பரிய பேறுபெற்ற குடும்பத்தில் பிறந்திருப்பார். கண்டிப்பும் நேர்மையும் உடையவர். பிறர் மீது ஆதிக்கம் செலுத்துபவர். சமூக சேவை, அரசியல், அரசு தொடர்பு பெறுவார். எவருக்கும் அஞ்சாத குணம் படைத்தவர். கிழமேல் வீதியில் வடக்குவாசல் இருப்பிடத்தில் பிறந்தவர்

கடகத்தில் குரு இருக்கும் ஆண்கள் எப்படிப்பட்டவர்கள்?

கடகத்தில் குரு இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்: சதைப்பிடிப்பான தோற்றம் உடையவர். எளிமை நிரம்பியவர். அன்பு, கருணை, இரக்கம் உடையவர். அடிக்கடி குழப்பமும் அடைவார். மனசஞ்சலம் உடையவர். தென்வடல் வீதியில் மேற்கு பார்த்த வீட்டில் பிறந்திருப்பார். கௌரவமான வாழ்வை பெறுவார்

மிதுனத்தில் குரு இருக்கும் ஆண்கள் எப்படிப்பட்டவர்கள்?

மிதுனத்தில்குரு இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள் என்றும் இளமை உடையவர். இனிமையாக நகைச்சுவை கலந்து பேசுபவர். மென்மையான இயல்புடையவர். புத்திசாலித்தனம் உடையவர். கல்வியில் ஊக்கம் உடையவர். உள்ளுணர்வு உடையவர். கீழமேல் வீதியில் தெற்கு நோக்கிய வீட்டில் பிறந்திருப்பார்.