நவராத்திரியின் வகைகள்

ஒரு ஆண்டுக்கு 4 நவராத்திரிகள் உள்ளன. ஆஷாட நவராத்திரி – வராகி தேவி, சாரதா நவராத்திரி – துர்கா, லட்சுமி, சரஸ்வதி, சியாமளா நவராத்திரி – இராஜ மாதங்கி தேவி, வசந்த நவராத்திரி – லலிதா திரிபுரசுந்தரி ஆகியவையாகும். 1. நவராத்திரியின் வகைகள் வசந்த காலத்தில் கொண்டாடப் படுவது வஸந்த நவராத்திரி. (பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)  2. ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. (ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்) …

கொலு வைத்து கொண்டாடினால் அம்பிகை குடியேறுவாள்

நவராத்திரி விழாவை கொலு வைத்து கொண்டாடுவது மரபு. நவராத்திரியன்று, பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது. பத்து நாட்களும் விதவிதமாக பிரசாதங்கள் படையலிட்டு, பாடல்கள் பாடி, அம்மனை வழிபடுவார்கள். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை வரும் 07 தேதி தொடங்குகிறது.…

நவராத்திரி பாடல்கள்

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ!ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ!ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ!ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ!ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ!ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ!ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ! இந்த 7 நாமங்களை தினசரி 11 முறை உச்சரித்தால் ஆயிரம் நாமங்களை உச்சரித்ததற்கு சமம். ஈஸ்வர ஸ்வரூபமாக விளங்கும் காஞ்சி மஹா பெரியவர் அன்னை லலிதையின் ஆயிரம் திருநாமங்களில்,தனது உள்ளுணர்வால்…

நவராத்திரி பற்றிய 50 சிறு குறிப்புகள் வருமாறு

1.சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. 2. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம். 3. விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து  பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும். 4. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 5. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி…