திருவோணம் நட்சத்திரம் – Thiruvonam natcharam

திருவோண நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன் என்பதால் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள். தனக்கென தனிக்கொள்கையுடன் வாழ்வார்கள். சுத்தத்திற்கும், தூய்மைக்கும் அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். சுத்தமில்லாதவர்களை அருகில் கூட சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். இரக்க குணம் உள்ளவர்கள். பிறருக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வார்கள். எந்த ஒரு விஷயத்தையும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் செய்து முடிப்பார்கள். சிறந்த பக்திமானாக விளங்குவார்கள். வாழ்க்கையில் எத்தனை ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தாலும் கூட எளிமையாக வாழ்பவர்கள். அடுத்தவர் பிரச்னைகளுக்கு ஆலோசனைகள் வழங்குவார்கள். நடத்தையில் அடக்கமும், நேர்மையும் நிறைந்திருக்கும்.…