மிதுனத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்?

மிதுனத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்களா நீங்கள்? அப்ப உங்களுடைய குணங்கள் இப்படி தான் இருக்கும். நாடி விதிப்படி பெண்களுக்கு ஜீவ கிரகம் சுக்ரன். அந்த சுக்கிரன் மிதுனத்தில் இருக்கும் போது அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதின் பொதுப் பலன்கள்: என்றும் இளமை உடையவர். இனிமையாக நகைச்சுவை கலந்து பேசக்கூடியவர். மென்மையான இயல்புடையவர். புத்திசாலித்தனம் உடையவர். கல்வியில் ஊக்கம் உடையவர். உள் உணர்வு உடையவர். காதல் மனம் உடையவர். கிழமேல் வீதியில் தெற்கு நோக்கிய வீட்டில் பிறந்திருப்பார்.

ரிஷபத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்?

ரிஷபத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்களா நீங்கள்? அப்ப உங்களுடைய குணங்கள் இப்படி தான் இருக்கும். நாடி விதிப்படி பெண்களுக்கு ஜீவ கிரகம் சுக்ரன். அந்த சுக்கிரன் ரிஷபத்தில் இருக்கும் போது அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதின் பொதுப் பலன்கள்: அழகும் ரூபமும் நிரம்பியவள். நாகரீகமான குடும்பத்தோடு பிறந்தவள். இளமையான பேச்சாற்றல் உடையவள். சதா உற்சாகம் நிரம்பியவள். சுகபோக ஆடை ஆபரண நாட்டம் உடையவள். கலைகளில் விருப்பம் உடையவள். கிழக்கு வாசல் வீட்டில் பிறந்தவள்.

மேஷத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்?

மேஷத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்களா நீங்கள்? அப்ப உங்களுடைய குணங்கள் இப்படி தான் இருக்கும். நாடி விதிப்படி பெண்களுக்கு ஜீவ கிரகம் சுக்ரன். அந்த சுக்கிரன் மேஷத்தில் இருக்கும் போது அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதின் பொதுப் பலன்கள் ஜாதகி சிவப்பு நிறமுடையவள். முன்கோபம் பிடிவாதம், செயல் வேகம் உடையவள். பிறர் மீது ஆதிக்கம் செலுத்துபவள். பிறருக்கு அடங்கி நடப்பது கடினம். சுகங்களை விரும்புபவள். வடக்கு வாசல் வீட்டில் ஜெனித்தவள்.

6 ல் சூரியன் இருந்தால் உண்டாகும் நோய்கள்

உங்களுடைய ஜாதகத்தில் ‘ல’ என்று குறிப்பிட்டிருக்கும் இடத்தில் இருந்து ஆறாவதாக இருக்கும் கட்டம் ஜாதகருக்கு உண்டாகும் நோய்களைக் குறிக்கும். அந்த ஆறாம் பாவகத்தில் சூரியன் இருக்கும் பொழுது ஏற்படக் கூடிய நோய்களைப் பற்றிக் காண்போம். உடல் உஷ்ணம் தொடர்பான நோய்கள். தலைவலி கண் சம்பந்தப்பட்ட நோய்கள் உடலில் எரிச்சல் தன்மை சூட்டுகட்டி உடல் சூடு அம்மை அஜீரணக் கோளாறு வழுக்கை சுக்கிலம் நீர்த்து போதல் இதயம் தொடர்பான நோய்கள் மாரடைப்பு.