சித்திரை நட்சத்திரம் – chiththirai natchaththiram

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த தெய்வ பக்தி கொண்டவர்களாக இருப்பார்கள். ஆன்மீக, தெய்வீக காரியங்களில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்த நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் பகவான் என்பதால் முன்கோபம் கொண்டவர்களாக இருப்பர்கள். அழகிய தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள். ஒழுக்கமானவர்களாகவும் திகழ்வார்கள். பிறருக்கு கொடுத்து உதவும் தாராள மனம் படைத்தவர்கள். மற்றவர்களிடம் பணிபுரிவதை விட சொந்தத் தொழில் செய்வதையே விரும்புவார்கள். எந்த சோதனைகள் வந்தாலும் கொண்ட கொள்கையை விட்டு மாறமாட்டார்கள். எந்த காரியத்தையும் காலம் தாமதிக்காமல் உடனடியாக செய்து முடிக்க…