உத்திராடம் நட்சத்திரம்

உத்திராடம் நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான் என்பதால் நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும் உடையவர்களாக இருப்பார்கள். எதிலும் எளிமையை விரும்புவார்கள். ஆடம்பரத்தை விரும்பமாட்டார்கள். எந்த ஒரு காரியத்தையும் நேர்மையாக, தெளிவாக சிந்தித்து செயலாற்றுவார்கள். எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்கமாட்டார்கள். எவரையும் எளிதாக நம்பமாட்டார்கள். ஆனால் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்காக எதையும் செய்ய துணிவார்கள். ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கையையும், மற்றவர்களை மதித்து நடக்கும் பண்பினையும் கொண்டவர்கள். இவர்களை எளிதில் எடை போட முடியாது. மர்மமான மனிதர்களாக இருப்பார்கள்.…