உத்திரம் நட்சத்திரம்

உத்திர நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகுந்த மன வலிமையையும், உண்மையையே பேசும் குணத்தையும் கொண்டிருப்பார்கள். கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும், சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். கம்பீரமான நடையும், பெண்களை எளிதில் கவரும் உடலமைப்பையும் கொண்டிருப்பார்கள். எதிர்காலம் கருதி திட்டமிட்டு செயலாற்றுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். எப்போதும் சுறுசுறுப்புடன் காணப்படுவார்கள். எந்த ஒரு காரியத்தையும் சமார்த்தியமாக செய்து முடிப்பார்கள். எந்த ஒரு காரியத்தையும் நேர்மையாகவும், உண்மையாகவும் அணுகுவார்கள். எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு…