ஆயில்யம் நட்சத்திரம் – Ayilyam natchaththiram

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகிய கண்களையும், சுருட்டை முடியையும் கொண்டிருப்பார்கள். எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்ளும் யுக்தி தெரிந்தவர்கள். இந்த நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான் என்பதால் நல்ல பேச்சாற்றாலும், கல்வியறிவும் இருக்கும். சகல வித்தைகளையும் கற்றுக் கொள்வதில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். தங்களது இனிமையான பேச்சினால் கல்லையும் கரைய வைத்து விடுவார்கள். மன வலிமையையும், உடல் வலிமையையும் ஒருங்கேப் பெற்றவர்கள். எந்த பிரச்னையையும் எதிர்கொள்ளக் கூடிய திறமை படைத்தவர்கள். நாளை என்ன நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே…