திருப்பாவை பாடல் 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைதூய பெருநீர் யமுனைத் துறைவனைஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைதாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைதூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுதுவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கபோய பிழையும் புகுதருவான் நின்றனவும்தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் பொருள்: வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை…

திருப்பாவை பாடல் 4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறிஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துபாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்துதாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்                        வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய். பொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான…

திருப்பாவை பாடல் 3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்துஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகளபூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பதேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றிவாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய். பொருள்: சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த…

திருப்பாவை பாடல் 2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்பையத்துயின்ற பரமன் அடிபாடிநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிஉய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய். பொருள்: திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக்கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட…

திருப்பாவை பாடல் 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான்பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும்…

ஆண்டாள் அருளிய திருப்பாவை

“மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று கண்ணபிரான் கீதையில் மொழிந்துள்ளார். மார்கழி மாதம் இவ்வாறு சிறப்பு மிக்கதாக இருக்கவும், நாட்டுப்புறங்களில் மார்கழி மாதத்தை பீடை மாதம் என்று சொல்லி மங்கள வினைகளை எதனையும் ஆற்றாமல் தவிர்த்து வருகிறார்கள். ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்’ என்ற திருப்பாவை தொடங்குகின்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்கொடியாம் ஆண்டாள், ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஆவர். “மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்று திருவரங்கத் துறை திருவரங்க நாதரையே…