அனுஷம் நட்சத்திரம் – anusham natchththiram

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது கவர்ச்சியான தோற்றத்தால் அனைவரையும் கவர்வார்கள். சிறந்த பேச்சாற்றலைப் பெற்றிருப்பார்கள். நேர்மையானவர்கள் என்பதால் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவார்கள். கடவுள் பக்தி கொண்டவர்கள். போராட்ட குணத்தைப் பெற்றிருப்பதால் வாழ்க்கையில் எந்த தடையையும் கண்டு அஞ்ச மாட்டார்கள். யார் குற்றம் செய்தாலும் நெற்றிக்கண் திறப்பின் குற்றம் குற்றமே என்பார்கள். பல பேரது சுமைகளை தாங்குபவர்களாக இருந்தாலும் கூட, தன்னுடைய சுமைகளை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். எல்லா விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்வதில்…