சிம்மத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்?

சிம்மத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்களா நீங்கள்? அப்ப உங்களுடைய குணங்கள் இப்படி தான் இருக்கும். நாடி விதிப்படி பெண்களுக்கு ஜீவ கிரகம் சுக்ரன். அந்த சுக்கிரன் சிம்மத்தில் இருக்கும் போது அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதின் பொதுப் பலன்கள்: அதிகாரமிக்க செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவள். பிறர் மீது ஆதிக்கம் செலுத்துபவள். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் உடைய வள். சுயகௌரவம் அதிகம் எதிர்பார்ப்பவர். வடக்குவாசல் வீட்டில் பிறந்தவர்.

கடகத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்?

கடகத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்களா நீங்கள்? அப்ப உங்களுடைய குணங்கள் இப்படி தான் இருக்கும். நாடி விதிப்படி பெண்களுக்கு ஜீவ கிரகம் சுக்ரன். அந்த சுக்கிரன் கடகத்தில் இருக்கும் போது அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதின் பொதுப் பலன்கள்: எளிமையான அழகு நிரம்பியவர். பொறுமை, அறிவு உடையவர். உடல் பலவீனம் உடையவர். வெள்ளைப்படுதல் எனும் பாதை பெறுபவள். அடிக்கடி சலனங்களும் குழப்பங்களுக்கும் ஆளாகுபவள். மேற்கு வாசல் வீட்டில் பிறந்தவள்

மிதுனத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்?

மிதுனத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்களா நீங்கள்? அப்ப உங்களுடைய குணங்கள் இப்படி தான் இருக்கும். நாடி விதிப்படி பெண்களுக்கு ஜீவ கிரகம் சுக்ரன். அந்த சுக்கிரன் மிதுனத்தில் இருக்கும் போது அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதின் பொதுப் பலன்கள்: என்றும் இளமை உடையவர். இனிமையாக நகைச்சுவை கலந்து பேசக்கூடியவர். மென்மையான இயல்புடையவர். புத்திசாலித்தனம் உடையவர். கல்வியில் ஊக்கம் உடையவர். உள் உணர்வு உடையவர். காதல் மனம் உடையவர். கிழமேல் வீதியில் தெற்கு நோக்கிய வீட்டில் பிறந்திருப்பார்.

ரிஷபத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்?

ரிஷபத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்களா நீங்கள்? அப்ப உங்களுடைய குணங்கள் இப்படி தான் இருக்கும். நாடி விதிப்படி பெண்களுக்கு ஜீவ கிரகம் சுக்ரன். அந்த சுக்கிரன் ரிஷபத்தில் இருக்கும் போது அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதின் பொதுப் பலன்கள்: அழகும் ரூபமும் நிரம்பியவள். நாகரீகமான குடும்பத்தோடு பிறந்தவள். இளமையான பேச்சாற்றல் உடையவள். சதா உற்சாகம் நிரம்பியவள். சுகபோக ஆடை ஆபரண நாட்டம் உடையவள். கலைகளில் விருப்பம் உடையவள். கிழக்கு வாசல் வீட்டில் பிறந்தவள்.

மேஷத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்?

மேஷத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்களா நீங்கள்? அப்ப உங்களுடைய குணங்கள் இப்படி தான் இருக்கும். நாடி விதிப்படி பெண்களுக்கு ஜீவ கிரகம் சுக்ரன். அந்த சுக்கிரன் மேஷத்தில் இருக்கும் போது அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதின் பொதுப் பலன்கள் ஜாதகி சிவப்பு நிறமுடையவள். முன்கோபம் பிடிவாதம், செயல் வேகம் உடையவள். பிறர் மீது ஆதிக்கம் செலுத்துபவள். பிறருக்கு அடங்கி நடப்பது கடினம். சுகங்களை விரும்புபவள். வடக்கு வாசல் வீட்டில் ஜெனித்தவள்.

மீனத்தில் குரு இருக்கும் ஆண்கள் எப்படிப்பட்டவர்கள்?

குரு மீனத்தில் இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள் எளிமை, அழகு உடையவர், பொறுமை ஆனவர், அன்பு, கருணை, இரக்கம் உடையவர். வெகு செலவாளி. இரட்டை குணமுடையவர். பாச உணர்வு உடையவர். நிர்வாகத் திறமை உடையவர். அழகை ஆராதிப்பவர். தென்வடல் வீதியில் மேற்கு வாசல் வீட்டில் ஜெனித்தவர்.

கும்பத்தில் குரு இருக்கும் ஆண்கள் எப்படிப்பட்டவர்கள்?

குரு கும்பத்தில் இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்: சுயநலம் மிகுந்தவர். கௌரவம், புகழ், லாபம் இவற்றை விரும்புபவர். அறிவாற்றல் உடையவர். நிர்வாகத் திறமை கொண்டவர். ஆன்மீக ஈடுபாடு, சமுதாயப் பணி, அரசியல் ஈடுபாடு உடையவர். கிழமேல் வீதியில் தெற்கு வாசல் வீட்டில் ஜெனித்தவர்.

மகரத்தில் குரு இருக்கும் ஆண்கள் எப்படிப்பட்டவர்கள்?

குரு மகரத்தில் இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்: கருப்பு நிறம் கொண்டவர். அலட்சிய சுபாவமும், மந்தமும் உடையவர். எவருடனும் ஒட்டாமல் வாழ்பவர். உடலுக்கு ஊறு விளைவிக்கும் பழக்கங்களை உடையவர். தென்வடல் வடக்கு வீதியில் கிழக்கு நோக்கிய வீட்டில் பிறந்தவர்.

தனுசில் குரு இருக்கும் ஆண்கள் எப்படிப்பட்டவர்கள்?

குரு தனுசில் இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்: கௌரவமான மதிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர். நற்குணங்களும், அமைதியும் நிரம்பியவர். நல்லவை களுக்காக கோபம் கொள்பவர். திறமை, அறிவு, புகள் உடையவர். கிழமேல் வீதியில் வடக்கு நோக்கிய வீட்டில் பிறந்தவர்.

விருச்சகத்தில் குரு இருக்கும் ஆண்கள் எப்படிப்பட்டவர்கள்?

குரு விருச்சகத்தில் இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்: நல்ல உயரம் கொண்டவர். சிவப்பு நிற மாணவர். அங்கங்களில் தழும்பு உடையவர். சுறுசுறுப்பானவர். தைரியமானவர். சுயநலம் பேணுபவர். முன்கோபம், பிடிவாதம், ஆத்திரம் உடையவர். உடலில் உஷ்ணம் அதிகம் உடையவர். மற்றவரை உதாசீனப்படுத்துவதிலும், படைத்தலும் உடையவர். தென்வடல் வீதியில் மேற்கு நோக்கிய வீட்டில் பிறந்தவர்.

error

Enjoy this blog? Please spread the word :)

YouTube485
YouTube
Pinterest0