விஷ்ணுபதி புண்ணிய காலம்

அக்ஷய ஜோதிட வித்தியாலயத்தின் கோவை மையத்தின் அஸ்ட்ரோ ஜ்வாலா வழங்கும் ஸ்ரீ விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நெஞ்சுக்கு நிம்மதி! ஆண்டவன் சன்னதி!! நினைத்தால் எல்லாம், விஷ்ணுபதி புண்ணிய காலத்திலே……..🙏🙏* 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பது சூரிய பகவான் ஸ்திர ராசிகளில் சஞ்சரிக்கும் முதல் நாளாகும். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர ராசிகளில் சூரியன் சஞ்சரிக்கின்ற முதல் நாளே ஸ்ரீ விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். இந்த நான்கு நாட்கள் மட்டுமே ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் தனித்தன்மை வாய்ந்த நாட்களாக சாஸ்திரம் கூறுகிறது.

வருகின்ற கார்த்திகை மாதம் முதல் தேதியன்று கால புருஷனின் தத்துவப்படி, எட்டாம் வீடாகிய விருச்சிகத்தில் சூரியன் பிரவேசம் ஆகிறார். இந்த விருச்சிகம் என்பது சூரியனின் ஆட்சி வீடு மற்றும் மூலத்திரிகோண வீடாகிய, சிம்ம வீட்டிற்கு சதுர் கேந்திரமான சுகஸ்தான வீடாக அமைகிறது. அத்துடன், இந்த விருச்சிகம் என்கின்ற வீடு நீர் ராசியாகும். இந்த நீர் ராசியில் சூரியன் பிரவேசம் செய்யும் பொழுது, நீர் சம்பந்தப்பட்ட உபாதைகளில் உள்ளவர்கள் அதற்குண்டான, முறையான மருத்துவத்தை மேற்கொண்டால் அவர்கள் நிச்சயமாக நல்ல முறையில் உடல் நலம் தேறி சுகம் பெறுவார்கள். அதுமட்டுமின்றி, இந்த நாளில் உலகத்தை காத்து ரட்சிக்கும் பொறுப்பினை கொண்ட ஸ்ரீ மகா விஷ்ணுவையும், அனைத்து உயிர்களையும் அன்பு செலுத்தி இரட்சிக்கின்ற ஸ்ரீ மகாலட்சுமி தாயாரையும் வழிபாடு செய்தால் அனைவருக்கும் நல்ல உடல் சுகத்தையும் மன நிம்மதியையும் இறையருள் நிச்சயம் கொடுக்கும்.

இத்தகைய அரும்பெரும் வரப்பிரசாதமான பெருமாள் வழிபாட்டை நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என நமது முன்னோர்கள் கீழ்க்கண்டவாறு வழங்கியுள்ளார்கள்.

🙏பெருமாள் கோயிலுக்குச் சென்று முதலில் கொடிமரத்தை நமஸ்காரம் செய்யுங்கள்.

கொண்டுசெல்லும் பூக்களில் இருபத்தி ஏழு பூக்களை கையில் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

இருபத்தி ஏழு முறை கோவிலில் பிரதட்சணமாக சுற்றி வாருங்கள். ஒவ்வொரு முறை சுற்றி வரும்போதும் ஒரு பூவை கொடி மரத்திற்கு முன்னால் வைத்து மானசீகமாக மூலவரை வணங்கி பிரார்த்தனை செய்யுங்கள்.

ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடிமரத்திற்கு முன்வைத்து 27 சுற்றுக்கள் முடிந்த பின்பு, மீண்டும் கொடிமர நமஸ்காரம் செய்து தியானம் செய்யுங்கள்.

கொடிமரம் இல்லாத பெருமாள் கோயிலில் கோவில் பிரகாரத்தை வலம் வந்தாலும் ஏற்புடையதே! அதன்பின்பு மகாலட்சுமி தாயாரையும் மனமார வணங்கி உங்கள் பிரார்த்தனையை ஆத்மார்த்தமாக வெளிப்படுத்துங்கள்!

உங்கள் பிரார்த்தனை எதுவாக இருந்தாலும் அடுத்த மூன்று விஷ்ணுபதி காலம் நிறைவு பெறுவதற்குள் உங்கள் பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறும்! இது நமது ஆன்மீக பெரியோர்கள் காட்டிய ஒரு அற்புதமான வழி!

கோவிலுக்கு செல்வதற்கு வாய்ப்பில்லாதவர்கள் தனது இல்லத்திலேயே பெருமாள் படத்தை வைத்து மேற்கூறிய முறையில் கொடிமர நமஸ்காரம் செய்வது போலவும் கோவில் பிரகாரம் வலம் வருவது போலவும் மானசீகமாக நினைத்து வழிபாடு செய்யுங்கள். அல்லது வீட்டில் உள்ள பெருமாள் படத்துக்கு அல்லது பெருமாள் விக்ரகத்துக்கு முன்பாக விளக்கை ஏற்றி வைத்து, அதை இருபத்தி ஏழு முறை சுற்றி வரலாம்.

இந்த வழிபாடுகள் அனைத்தும் மனமுருகி மானசீகமாக செய்தால் நிச்சயமாக அவர்களது பிரார்த்தனை செவ்வனே நிறைவேறும். இந்த வழிபாட்டு முறை நமது முன்னோர்கள் நமக்காக வழங்கியதாகும். வாழ்வில் கஷ்டம் நீங்கி இன்பம் பெறவும், மன நிம்மதி அடையவும், தொழிலில் வளர்ச்சி காண்பதற்கும், கடன்கள் கஷ்டங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும், நல்ல முறையில் திருமணம் நடந்து ஏற்ற வாழ்க்கை துணை அமையவும், சந்ததி பெருக சந்தான பாக்கியம் பெறவும் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் நமக்கு கிடைத்துள்ள அரும்பெரும் வரப்பிரசாதமாகும்.

அனைவரும் இந்த வழிபாடு செய்து எல்லா விதமான இன்பங்களையும் பெற

அக்ஷயா ஜோதிட வித்தியாலயத்தின் கோவை மையத்தின் அஸ்ட்ரோ ஜுவாலா சேனல் தங்கள் அனைவருக்கும் அன்புடன் சமர்ப்பிக்கிறது! வாழ்க வளமுடன்!! வாழ்க வையகம்!!! 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ விஷ்ணுபதி புண்ணிய காலம் : நாளை செவ்வாய்க்கிழமை ஐப்பசி 30 ஆம் தேதி (16-11-2021) மதியம் 12- 18 முதல்……………………….. 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 வரம் தர காத்திருக்கும் பரம்பொருளை மறவாமல் வழிபடுவோம்! வளம் பெறுவோம்!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *