மேஷம் ராசி பலன்கள்

ஜென்ம ராகு, ஏழாம் வீட்டில் கேது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராகு உங்கள் ராசிக்கு வந்திருக்கிறார். திடீர் பணவருமானம் வரும் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். மனைவி பெயரில் புதிய தொழில் தொடங்கலாம். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வேலையில் திடீர் இடமாற்றம் வரலாம். திடீர் செலவுகள் வரும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். கண் நோய் நீங்கும், பல் சம்பந்தமான நோய்கள் நீங்கும். மூல வியாதி குணமாகும். கணவன் அல்லது மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். திருமண காரியங்கள் தடைபடும். சமூக தொடர்புகளில் சிக்கல்கள் உண்டாகும். தொழில் வகை கூட்டாளிகளுடன் கருத்துவேறுபாடுகள் உண்டாகும். உடலில் வலி உண்டாகும். நோய் நொடிகளால் மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும். எந்த வேலையிலும் கவனமாகவும் விழிப்புணர்வோடும் இருப்பது அவசியம்