
இதுநாள்வரை உங்கள் ராசியில் அமர்ந்து உங்களை ஆட்டிப்படைத்த ராகு இனி விரைய ஸ்தானத்திற்கு மாறுவது சிறப்பு. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதன் அடிப்படையில் இப்பொழுது கெட்ட இடத்திற்கு ராகு கேது வருவது நல்லது தான். உடல் வலி நீங்கும், மனதில் இருந்து வந்த இனம் புரியாத பயம் நீங்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நல்ல தூக்கம் வரும். உடலில் தெம்பு உண்டாகும். எதிரிகளின் கொட்டம் அடங்கும். கடன் தொல்லைகள் குறையும். தாய்மாமனுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பாதத்தில் வலி உண்டாகும். கணவன் அல்லது மனைவியுடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமணத்தடைகள் நீங்கும். தொழில் வகை கூட்டாளிகளுடன் இணக்கம் உண்டாகும். சமுகத்தொடர்புகள் அதிகரிக்கும். திருமண சடங்கு, கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம்,தொழில் அமையும் வாய்ப்பை அமைத்துக்கொடுப்பார். சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும். கேது பெயர்ச்சியால் சிலருக்கு புது வேலை வாய்ப்பு மற்றும் தொழில் அமையும். இதுநாள் வரை தொந்தரவு செய்த நோய்பிரச்சினை நீங்கும். போட்டி பொறாமை ஒழியும்.