
இது வரை 6ஆம் வீட்டில் இருந்த ராகு 5ஆம் இடத்திற்கும் 12ஆம் வீட்டில் இருந்த கேது 11ஆம் இடத்திற்கும் வருகிறார்கள். எற்கனவே ராகு இருந்த இடம் நல்ல இடமாக இருந்தாலும் 12ல் இருந்த கேது நோய் நொடிகளுக்கு வைத்திய செலவுகளை செய்ய வைத்து கடன் சுமையை எற்படுத்தினார்கள். போதுமான வருமானம் வந்தாலும் நிம்மதி குறைந்த வாழ்க்கை வாழ்ந்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும். 18 வருஷத்துக்கு பிறகு 5ம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம். கேது லாப ஸ்தானத்தில் வருவதால் தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும் தடைப்பட்ட காரியத்தை செவ்வன செய்து முடிப்பீர்கள். கடன் சுமை குறையும். இந்த ராகு கேது பெயர்ச்சி நிலையான தொழில் யோகத்தையும் வலிமையான சம்பாதித்யத்தையும் கொடுக்கும். அசையா சொத்துகள் வீடு மனை வாங்கும் யோகத்தை கொடுக்கும்.