ராகு கேது பெயர்ச்சி பலன்கள் விருச்சிகம் ராசியனருக்கு

உங்கள் ராசியில் கேது 7 ஆம் பாவத்தில் ராகு இருந்த நிலை மாறி இனி விரைய ஸ்தானமான 12 ஆம் பாவத்தில் கேது 6ஆம் பாவத்தில் ராகு வருகிறது. ஏழரை சனியால் அவதிப்பட்டு பின்னர் விடுபட்டாலும் ஜென்ம கேது மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதுநாள் வரை யாருக்கோ போக வேண்டிய பிரச்சனைகள் உங்களை வாட்டி வதைத்தது. இனி பிரச்சினைகள் தீரப்போகிறது. எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன்கள் அடைப்படும் தீராத நோய் தீரும். தொழில் முயற்சிகள் கை கூடும்.படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். திருமணம் கை கூடி வரும் சந்தான யோகம் தேடி வரும். நீண்ட நாள் பட்ட கடன்களும் அடைப்படும். உடலில் இருந்து வந்த சோம்பலும் , மனச்சோர்வும் நீங்கும். உடலில் தெம்பும் ,உற்சாகமும் உண்டாகும். கணவன் அல்லது மனைவிக்கு உடல் நலம் சீரடையும். எதிரிகளின் தொல்லைகள் குறையும். அயல் நாட்டு பயணங்கள் தடைப்படும். சித்தர் சமாதிகளின் தரிசனம் உண்டாகும். தியானம் பழகுவதில் நாட்டம் உண்டாகும். தெய்வீக கனவுகள் வரும். பாதத்தில் வலி உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *