
ராசியில் கேது வந்து அமர்கிறார். ஏழாம் வீட்டில் ராகு பயணம் செய்கிறார். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு அமர்வதால் கஷ்டங்கள் நீங்கி இனி தலை நிமிரலாம். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி ஓன்று சேரலாம். ராசியில் கேது சஞ்சரிப்பதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும்.வருமானம் திருப்தி தரும்.தேவைகள் பூர்த்தியாகும்.குடும்பத்தில் பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்வீர்கள். தடைபட்ட பணவரவுகள் திரும்ப வர ஆரம்பிக்கும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆயுள் பயம் நீங்கும். உடலில் சோம்பலும், மனச்சோர்வும் உண்டாகும். எதிலும் ஆர்வம் இருக்காது. கணவன் அல்லது மனைவிக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும். வாழ்க்கையே போர்க்களம், ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் மாற்றம் முன்னேற்றம் வரும்.