
ராகு பெயர்ச்சி யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரப்போகிறது. எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். கோர்ட் வம்பு வழக்கு சாதகமாகும்.சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ராசிக்கு 2ஆம் வீட்டில் கேது வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். உங்கள் முயற்சி தன்னம்பிக்கை மூலம் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். தம்பி,தங்கைகளுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். பயணத்தடைகள் நீங்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மனைவி அல்லது கணவன் மூலம் எதிர்பாரத பண வரவுகள் உண்டாகும். கணவன் அல்லது மனைவிக்கு பல், கண் சம்பந்தமான நோய்கள் வரும் கவனம் தேவை.