ராகு கேது பெயர்ச்சி பலன்கள் சிம்மம் ராசியனருக்கு

கடந்த காலங்களில் பல பிரச்சினைகளை சந்தித்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் விமோசனம் கிடைக்கும். வருமானம் திருப்தி தரும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இடையூறு நீங்கும்.மறைமுக எதிர்ப்புகள் விலகும். கேது மாறி வரும் இடம் முன்றாம் பாவம் சகோதரம்,வீரியம்,வீரம்,எழுத்தறிவு,விளையாட்டு ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடி வரும், புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். நிர்வாக பொறுப்புகள் தேடி வரும். நினைத்த காரியம் கைகூடி வரும். நிலம் , வீடு சம்பந்தமான தடைகள் நீங்கும். தாயுடனிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கல்வித்தடை நீங்கும். தம்பி,தங்கைகளுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். தந்தைக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும். தெய்வ நம்பிக்கை குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *