ராகு கேது பெயர்ச்சி பலன்கள் கடகம் ராசியனருக்கு

லாப ஸ்தானத்தில் இருந்த ராகு தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். நீங்கள் எடுக்கும் ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். தொழிலாளியாக இருந்த நீங்கள் முதலாளி ஆகும் யோகம் வரும். நினைத்த மாதிரி நல்ல வேலை வாய்ப்பு அமையலாம் சம்பள உயர்வும் வசதி வாய்ப்புகளும் தேடி வரும். சொந்த வீடு வாங்கும் யோகம் வரும், சுப காரியங்கள் நல்லமுறையில் கைகூடி வரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு இனி சிறிது சிறிதாக கடன் சுமை குறையும். குழந்தைகளுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். காதலுக்கு இருந்துவந்த தடைகள் நீங்கும். வியாபாரத்தில் தடைகள் உண்டாகும். கல்வியில் தடை உண்டாகும். நிலம் ,வீடு சம்பந்தமான சிக்கல்கள் வரும். வீடு, வாகனங்கள் அமைவதில் தடைகள் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *