ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மிதுனம் ராசியனருக்கு

ராகு லாப ஸ்தானத்திற்கு மாறுவதால் எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் கொடுப்பார். ராகு போட்டி பொறாமைகளை ஒழிப்பார். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள். அடுத்தவர்களின் சூழ்ச்சியால் உங்களுக்கு வந்த பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான். பலவித சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும். வாங்கிய கடனுக்கு அசலுக்கு அதிகமாக கடனை செலுத்தியவர்களுக்கு கடன் சுமை குறையும். காரிய வெற்றி உண்டாகும். வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும். குழந்தைகளால் மன வருத்தம் உண்டாகும். எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். ஆசைகள் நிறைவேறும். அண்ணன், அக்கா இவர்களுக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும். குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவது நல்லது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *