ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மீனம் ராசியனருக்கு

குடும்ப ராகு, எட்டாம் இட கேதுவால் திடீர் பணவருமானம் வரும் திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். அதே நேரத்தில் சேமிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்படும் அளவிற்கு செலவுகளும் வரும். கண் தொடர்பான பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும் கவனமாக இருப்பது அவசியம். வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். உங்க கோபம், உணர்வுகளை கட்டுப்படுத்துவது அவசியம். கணவன் அல்லது மனைவி மூலம் வரும் பண வரவுகள் தடைப்படும். மூல வியாதி, கண் நோய், பல் வலி போன்ற வியாதிகள் எட்டிப்பார்க்கும். தந்தையுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனோ தைரியும் உண்டாகும். பயணத்தடைகள் நீங்கும். தடைப்பட்ட தெய்வ காரியங்கள் நிறைவேறும். ராகு காலத்தில் ராகு கேதுவிற்கு அர்ச்சனை செய்யுங்கள் நல்லதே நடக்கும். ஆயுள் கண்டங்கள் நீங்கும் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *