ராகு கேது பெயர்ச்சி பலன்கள் கும்பம் ராசியனருக்கு

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, இது வரை 4ஆம் இடத்தில் இருந்த ராகு 3ஆம் இடத்திலும் 10 இடத்தில் இருந்த கேது 9ம் இடத்திற்கும் வருகிறார்கள். 3ஆம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார். ராகு இப்பொழுது யோகத்தை வாரி வழங்க போகிறார். இனி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.தேவைகள் பூர்த்தியாகும்.இது வரை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து வியந்து போவார்கள். திருமண நிகழ்ச்சிகள் சுபமாக முடியும். உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில், உத்யோகத்தில் தடைகள் நீங்கும். மாமியாருடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். தெய்வ காரியங்கள் தடைப்படும். தந்தையுடன் கருத்துவேறுபாடுகள் உண்டாகும். நண்பர்கள்
மூலம் கிடைக்கவேண்டிய உதவிகள் கிடைக்காது. தம்பி, தங்கைகளுக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும். காது சம்பந்தமான நோய்கள் தொல்லை தரும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். உற்றார் உறவினர் பகை மறந்து வீடு தேடி வருவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *