நீங்கள் தொட்டது துலங்க ஒரு தொட்டா சினுங்கி என்ற செடியை வளருங்கள்

தொட்டா சினுங்கி எனும் தாவரத்தின் வாயிலாக நமது எண்ண அலைகளை பஞ்ச பூத சக்தியின் மூல பூதமாய் இருக்கின்ற ஆகாய பெருவெளியில் பதிவு செய்து இதன் மூலமாக நமது தேவைகளை நாமே நிறைவேற்றிக் கொள்வதற்காக ஒரு தாந்திரீக பிரயோக பயிற்சி முறையே இது

ஒரு தொட்டால் சிணுங்கி தாவரத்தை நமது வீட்டிலோ அல்லது நமது தோட்டத்திலோ நல்லதொரு இடத்தில் வைத்து இதை வளர்த்து வரவேண்டும் இந்த தாவரத்திற்கு நாம் எதை விரும்பி உணவாக உட்கொள்கிறோமோ நாம் விரும்பும் அந்த பொருட்களை இந்த தாவரத்திற்கு ஊற்றும் தண்ணீரில் கரைத்து இந்தக் கரைசலை இந்த செடி செடிக்கு ஊற்றி வளர்த்து வர வேண்டும்

இந்தப் பயிற்சி முறையை கடைபிடிக்க நினைப்வர் மட்டுமே இந்த செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் அடுத்தவரின் நிழல் கூட இந்த தாவரத்தின் மேல் பட்டு விட கூடாது

இந்த முறையில் தொட்டால் சினுங்கியை வளர்த்து வந்தால் மட்டுமே நாம் நினைத்த காரியத்தை இதன் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள முடியும்

நமது நிழலும் இதன் மேல் எப்பொழுதும் படக்கூடாது இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்

இப்படி நம்மால் வளர்த்துவரும் செடியானது ஒரு அரை அடி அகல சுற்றளவிற்கு படர்ந்த பின்னால் நமது பயிற்சியை தொடங்கலாம் பயிற்சியை செய்யும்பொழுது நமது நிழல் எக்காரணத்தை கொண்டும் இந்த செடியின் மேலே பட்டுவிட கூடாது

இதோ பயிற்சி முறை

தொட்டால் சினுங்கி இலைகளுக்கு மேல் நமது கைகளை விரித்தபடி உள்ளங்கைகள் இரண்டும் இலைகளின் மேலே பட்டும்படாமலும் இருக்குமாறு நமது கைகளை வைத்துக் கொள்ள வேண்டும்

இந்தப் பயிற்சியை தொடங்கும் ஆரம்ப காலங்களில் நாளொன்றுக்கு பதினைந்து நிமிட நேரத்திற்கு குறையாமல் தொட்டா சினுங்கியின் இலைகளுக்கு மேலே அதாவது இலைகளை தொடாமல் ஆனால் கைகள் கொஞ்சம் தாழ்ந்தாலும் இலைகளை தொட்டுவிடும் தூரத்தில் நமது கைகளை வைத்திருக்க வேண்டும்

இப்படி ஒரு வார காலம் பழகி வந்தால் நமது கைகளின் காந்த உணர்வு சக்தியை இலைகளின் காந்த ஈர்ப்பு சக்தியானது கிரகித்துக்கொள்ளும் இந்த இலையானது நமது காந்த உணர்வை உள்வாங்கிக் கொள்வதால் நமது தொடு உணர்வை ஏற்றுக்கொள்ளும் ஒரு நிலையை ஒரு வார காலத்திலேயே பெற்றுகொண்டு நாம் தொட்டாலும் நம் தொடுதலுக்கு சுருங்காத ஒரு நிலையை இந்தத் தாவரம் பெற்றுவிடும்

ஒருவாரத்திற்கு பின்னால் தொட்டால் சினுங்கியின் இலைகளை மிக மிக லேசாக அதாவது ஆட்டாமல் அசைக்காமல் மெதுவாக நமது விரல்களால் தொட்டுப் பாருங்கள்

இப்போது உங்களுக்குள்
ஒரு ஆச்சரியம் ஏற்படும்

ஆம்

தொட்டால் சிணுங்கி இலை
நீங்கள் தொட்டால் சினுங்காது
அதாவது சுருங்காது
இது உண்மை

நீங்கள் தொட்டால்
தொட்டால் சினுங்கியின் இலைகள் உங்கள் தொடு உணர்வால் எப்பொழுது சுருங்காத ஒரு நிலையை பெறுகின்றதோ அப்போது இந்த தொட்டால் சினுங்கியின் இலைகளை தொட்டுக்கொண்டு உங்களது நல்ல கோரிக்கைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் பதிவு செய்யுங்கள்

அதாவது நமது மனமும் ஆன்மாவும் ஏற்றுக் கொள்ளும்படியான ஒரு கோரிக்கையை மட்டுமே இந்த தாவரத்தின் மூலமாக நாம் கேட்க முடியும் அதை மட்டுமே இந்த பிரபஞ்சமும் நமக்கு நிறைவேற்றி தரும்

உதாரணமாக

1 என் தேவையறிந்து
எனக்கு தேவையானதை தா

( ஏனெனில் நம் தேவை என்ன என்பது இந்த பிரபஞ்சத்திற்கு மட்டுமே தெரியும் )

2 என் தகுதிக்கு தகுந்த ஒரு
தரமான உயர்வை கொடு

( நமது தகுதியை இந்த பிரபஞ்சம் மட்டுமே நிர்ணயம் செய்து வைத்திருக்கின்றது )

3 இந்த பிரபஞ்சத்தின் ரகசியங்களை
அறிந்து கொள்ளும நல்லறிவை
எனக்கு தா

( இந்தக் கோரிக்கை ஒன்றை மட்டுமே எவர் ஒருவர் கேட்டாலும் உடனே தருவதற்கு இந்த பிரபஞ்சம் காத்துக் கொண்டு இருக்கின்றது )

இது போன்ற ஏதாவது ஒரு கேள்வியை மட்டும் இந்த செடியில் மூலம் உங்களது பிரார்த்தனையாக ஜெபித்து வாருங்கள் கட்டாயமாக உங்களது மன அலைகளை இந்த செடியின் மூலமாக நமது கோரிக்கையை இந்த பிரபஞ்சம் ஏற்றுக்கொள்ளும்

முடிந்தவரை பிரபஞ்ச சக்தியின் ரகசியத்தை அறியும் நுண்ணறிவை பெற வேண்டும் என்பதே வேண்டுதலாக வையுங்கள் இந்த பிரபஞ்சத்தின் ரகசியத்தை தெரிந்து கொள்வதை விட பெரியதொரு விஷயம் இப் புவியில் வேறு என்ன இருக்க போகின்றது

இந்த அறிவைப் பெறுவதற்கு தானே நமது ஆன்மாவும் மனமும் விருப்பம் கொண்டுள்ளது இந்த அறிவினை நாம் அடைந்து விட்டாலே மற்ற அனைத்து விஷயங்களும் நம்மை தானாக தேடி வந்துவிடும்

இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயமாக உங்கள் வாழ்வில் ஒரு மாற்றம் நிகழும் இந்த மாற்றத்தின் மூலமாக வாழ்வில் ஏதாவது ஒரு வழி உண்டாகும் இந்த பயிற்சியை செய்து வரும் பொழுது மனநிம்மதி உண்டாகும் இப்போதுதான் புதிதாக பிறந்தது போல ஒரு புத்துணர்ச்சி ஏற்படும் உங்கள் மனதிலே ஒரு ஆனந்தம் பரவசம் உண்டாகி இருப்பதை நீங்களே சிறிது நாட்களில் அறிந்து கொள்வீர்கள்

இதுவே நிலை என்று நினைத்துவிடாதீர்கள் இதற்கு மேலான ஒரு நிலையை பெறுவதற்கு தியான
முறையை மேற்கொள்ளுங்கள்

இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் மனம் உங்களை அறியாமல் உங்களுக்குள்ளே ஒரு உயர்ந்த சிந்தனையை உற்பத்தி செய்துவிடும் இதை நீங்கள் கண்டிப்பாக உணரலாம்

இந்த பயிற்சி செய்பவர்கள் எவராக இருந்தாலும் சரி அவர்கள் அனைவருமே தன்னை உணர்வதற்காக தியானமுறை பயிற்சியை நிச்சயமாக செய்ய தொடங்கி விடுவார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை இதை அனுபவத்தில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்

குறிப்பு

ஒரு செடியை ஒருவர்
மட்டுமே பயன்படுத்த வேண்டும்

சைவ உணவு நல்ல பழக்கவழக்கங்கள் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த பயிற்சி முறை பொருந்தும்

ஆகவே

தொட்டது துலங்க
தொட்டாசினுங்கியை வளருங்க

வறுமைகள் நீங்கி வாழ்க வளமுடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *