நினைத்ததை சாதிக்க உதவும் சோடசக்கலை நேரம்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களா? நாளை நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்யுங்கள். அதற்கான அற்புதமான நாள் கூடி வந்துள்ளது. நம்முடைய சித்தர்கள் நாம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வதற்காக, இந்த சோடசக்கலை நமக்கு சொல்லி வைத்துள்ளார்கள். குறிப்பாக இந்த புரட்டாசி அமாவாசை தினமான நாளை நீங்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ள கடவுளை நினைத்து தியானம் செய்ய வேண்டிய அந்த சோடசக்கலை நேரம் என்பது நாளை மாலை 03.49 லிருந்து 05.25 மணி வரை உள்ளது.

சோடசக்கலை நேரம் என்பது அகத்தியர் அருளியது. திதிகள் 15 உள்ளன. வளர்பிறை திதி 15 தேய்பிறை திதி 15 இதனை கலை என்றும் சொல்லலாம். இதில் பதினாறாவதாக உள்ள திதிதான் சோடசக்கலை. இது 5 சொடக்கு போடும் நேரமே இருக்குமாம். இந்த நேரம் திருமூர்த்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த பூஜை செய்வதன் மூலம் குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும். எல்லாம் வல்ல அன்னை அபிராமி ஒவ்வொரு திதியிலும் ஒவ்வொரு தேவியாகத் தோற்றமளித்து, தன்னை நாடும் பக்தர்களுக்கு அருளாசி புரிகின்றாள்.

அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும், பெளர்ணமி முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும் 16வதாக வரும் சோடசக்கலை நேரம் அற்புதமான நேரம் உள்ளது. இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும். புரட்டாசி அமாவாசை திதி நாளை மாலை வரை உள்ளது நாளைக்கு சோடசக்கலை நேரம் என்பது நாளை மாலை 03.49 லிருந்து 05.25 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும் நினைத்தது நிறைவேறும். அஷ்ட லட்சுமியின் அருளோடு செல்வ வளம் பெருகும்.

நன்மை தரும் அன்னதானம்
மாதம் தோறும் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை அன்னதானத்திற்காக ஒதுக்கி வையுங்கள். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் செய்யும் அன்னதானத்திற்கு அதிக பலன் உண்டு. முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். நல்லவை அதிகம் நடக்கும். பணம் வீட்டில் அதிகம் சேரும்.

பணக்காரர்களாவது எப்படி
சேட்டுகள், மார்வாடிகள் எல்லோரும் தலைமுறை தலைமுறையாகவே செல்வந்தர்களாக திகழ காரணம் அவர்களின் நடைமுறை வாழ்க்கைதான். பணத்தை எப்படி உபயோகிக்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. அம்பானி, அதானி எல்லாம் எப்படி பணக்காரர்களாக மாறுகிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. பணம் பண்ணும் வழியும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. பணத்தை எப்படி பெருக்குவது பணத்தை எப்படி தக்க வைப்பது என்ற சூட்சுமம் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

நறுமணம் கமழும் வீடு
வீட்டில் குப்பைகள் இருக்கக் கூடாது. சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறையில் பூக்களைப் போட்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நறுமணம் கமழும் வகையில் வைத்திருக்க வேண்டும். எங்கே நறுமணம் திகழ்கிறதோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்வார்கள்

பணத்தை ஈர்க்கும் பரிகாரம்
பணக்காரனாகவேண்டும், ஏன் கோடீஸ்வரனாகவேண்டும் என்று கூட பலருக்கும் ஆசை இருக்கும், சுக்கிரனும், குபேரனும் அன்னை மகாலட்சுமியும் பணக்காரர்கள் வீட்டில் மட்டும்தான்தான் தங்குவார்களா? நம்ம வீட்டிற்கு எல்லாம் வர மாட்டார்களா என்று பலரும் நினைப்பார்கள். மகாலட்சுமியையும், குபேரனையும் நம் வீட்டிற்கு வர வழைக்கவும், தங்க வைக்கவும் ஒரு பரிகாரம் உள்ளது. அதை செய்தால் கண்டிப்பாக நீங்களும் பணக்காரர்கள் ஆகலாம்.

கோடீஸ்வரராக மாற்றும் தியானம்
அமாவாசை முடிவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பே தியானத்தை தொடங்க வேண்டும் பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கேற்றி வைக்க வேண்டும். சைவ உணவுதான் சாப்பிட வேண்டும். வயிறு காலியாக இருந்தாலும் நல்லதுதான். ஆசனத்தில் அமர்ந்து இறைவனை மந்திரங்களால் ஜபிக்க வேண்டும். மனதிற்குப் பிடித்த மந்திரத்தை மனதால் ஜபித்து தியானம் செய்யலாம்.

இறைவனிடம் வேண்டுங்கள்
பூஜை அறையில் சுத்தமான ஆசனத்தை விரித்து அமைதியாக வடகிழக்கு திசையைப் பார்த்து கண்களை மூடி அமரவேண்டும். நம்முடைய தேவையை என்னவோ அதை நினைத்து தியானத்தில் இருக்க அவண்டும். இந்த தியானத்தை ஜாதி, மதம் கடந்து யார் வேண்டுமானாலும் செய்யலாம். நோய் தீர, கடன் தீர, வம்பு வழக்குகள் தீர, பிரிந்த தம்பதியர் சேர என எதை நினைத்து வேண்டுமானாலும் தியானம் செய்யலாம்.

அமாவாசை சோடசக்கலை தியானம்

அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்து வெளியிடும். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, அமாவாசை காலை மணி 10.20 வரை. பின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள்.அமாவசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் 11.20 மணி தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.இந்த இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 5 நொடிப்பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்த மொத்தப் பிரபஞ்சமும் வரும்.

பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும் ( நாம் வாழும் மில்கி வே, அருகில் உள்ள அண்ட்ராமீடா ), சகல உயிரினங்களும் (பாக்டீரியா, புல், பூண்டு , மரம், யானை, திமிங்கலம், சிறுத்தை, கழுதை, புலி, முயல், மான், பாம்பு, நீர்யானை, நட்சத்திர மீன், கணவாய் மீன், கடல்பசு, கடல் பாசிகள், ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி, பூரான், பல்லி, ஆந்தை, புறா, கிளி, காட்டெருமை, காண்டாமிருகம், நாய், குதிரை, கழுதை, கோவேறுக்கழுதை, எறும்பு, சுறா மீன் ), ஒவ்வொரு மனிதனும் சூட்சுமமாக அதிரும்.

அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அது கிடைக்கும். கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.பலவாக இருக்கக்கூடாது.

ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.

இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும் போதும் செய்ய வேண்டும். மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது சில மாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும். சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்து விடும்.இது அவரவர் உடல் பூதியத்தைப் பொறுத்தது. மனவலிமையைப் பொறுத்தது. திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள் வழங்குகிறார்.

தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்க வேண்டும். தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம். வெறும் தரையில் உட்காரக்கூடாது. வயிறு காலியாக இருக்க வேண்டும். சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும். (அசைவ உணவு அதற்கு எதிரானநிலையைத் தரும்) . நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம். உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது. மனக் கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும். வாசியோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம். மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.

அமைதியுடன் வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை (திருமணம், பணக்காரனாவது, நோய் தீர, கடன் தீர,எதிர்ப்புகள் விலக, நிலத்தகராறுதீர, பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர ,வழக்கு வெற்றி எதுவானாலும், ஏதாவது ஒன்று மட்டும் ) நினைத்த வண்ணம் கண்களை மூடி இருந்தால்போதும். தியான நேரம் பட்டினி இருந்தால் கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம் பாதிக்காது. இந்த தியானத்தை ஜாதி, மதம்,இனம், மொழி கடந்து மனிதராகப்பிறந்த எவரும் செய்யலாம்.

இந்த நேரத்தில் தியானம் செய்யலாம் அல்லது கீழே உள்ள மந்திரங்களில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.

1.ஓம் ரீங் சிவ சிவ
2.ஓம் ரீங் அங் உங்
3.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்

சோடசக்கலை நேரத்தில் கிறிஸ்தவர்கள் “யா கேப்ரியல்” (YAA GABRIEL) என்று பச்சை மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபிக்கலாம்.பச்சை மெழுகுவர்த்தி கிடைக்காதவர்கள் வெள்ளை மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபிக்கலாம்.மேற்குத் திசை பார்த்து நின்று ஜெபிக்கவும்.

இஸ்லாமியர்கள் வெள்ளை ஆடை அணிந்து ஒழுச் செய்த பின், அத்தர் பூசி மேற்குத் திசை பார்த்து நின்று “யா வஹ்ஹாப்”(YAA WAHHAAB) அல்லது யா ராஃபியு (YAA RAAFIYU) என்று ஓதவும்.

மாபெரும் மகத்துவம் நிறைந்த நேரம் சோடச கலை நேரம். அவசியம் நம் சித்தர்களின் குரல் அன்பர்கள் யாரும் தவற விடாதீர்கள்


தியானத்தில் அமரும் சோடசக்கலை நேரம் மாலை 03.49 லிருந்து 05.25 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும் நினைத்தது நிறைவேறும். வீடு, பங்களா, கார், பணம், வேலை, காதல், திருமணம் என உங்களுக்கு என்ன விருப்பமோ, நல்லதாக நினைத்து மனதார வேண்டுங்கள். நினைத்தது நிறைவேறிய உடன் அடுத்ததை நினைத்து தியானம் செய்யலாம்.

2 thoughts on “நினைத்ததை சாதிக்க உதவும் சோடசக்கலை நேரம்

  1. மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி.

  2. மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
    ரிஷபம் காயத்ரி மந்திரம் தெரிய படுத்தவும

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *