சனிப்பெயர்ச்சி பலன்களும் – எளிய பரிகாரங்களும்

மேஷம், மிதுனம், கன்னி, தனுசு ராசியினர் யோக பலன்களை அடைவார்கள்

சனிபகவான் நிகழும் மங்களகரமான சுபக்கிருது வருடம் தை மாதம் 3ம் நாள் செவ்வாய்க்கிழமை, 17.01.2023 அன்று மாலை 05.05 மணிக்கு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதலாகிச் செய்கிறார்.

கிரகப் பயிற்சி கூறிய பலன்களை எழுதுபவர்கள் ஆண்கள் பெண்கள் வியாபாரிகள் அரசியல்வாதிகள் தொழிலாளர்கள் விவசாயிகள் மாணவர்கள் உத்தியோகஸ்தர்கள் என்றெல்லாம் பலன் எழுதுகின்றனர்.

கோச்சார ரீதியாக ஒரு ராசிக்கு ஒரு கிரகம் வரும் போது அந்த கிரகம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பலனை வழங்கப்போவதில்லை.

சனிபகவானையே எடுத்துக் கொண்டால் அவர் எந்த ராசியில் இருக்கிறாரோ அந்த ராசியில் தொடங்கி இருக்கும் இடத்தை வைத்து பார்க்கும் பார்வைகளை வைத்து பலன்களை வழங்குவார்.

சனிபகவான் சஞ்சரிக்கும் ராசி சில ராசியினருக்கு சாதகமாக இருக்கலாம். சில ராசியினருக்கு பாதகமாக இருக்கலாம்.

பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய இடத்தில் அவர் சஞ்சரித்தாலும், ஒரு சில ஜாதகங்களுக்கு அவர்களின் பிறவி ஜாதகத்தில் சனிபகவான் ஆட்சியாக உச்சமாக நட்பாக இருக்கலாம் அத்தகைய ஜாதகங்களுக்கு அவர் வழங்கக்கூடிய கெடு பலன்கள் குறைவாக இருக்கும் பிறவி ஜாதகத்தில் பகை பெற்றோர் நீச்சமடைந்தோக்ரகதியிலோ இருந்தால் பலன்களும் மாறுபடும்.

இதுதான் பொதுவான விதியாகும், இதில் ஆண்களுக்கு ஒரு விதமான பலனும் பெண்களுக்கு வேறு விதமான பலனும் கிடைக்கப் போவதில்லை. ஒவ்வொருவரின் ஜாதக ரீதியாக, கிரகங்கள் அமர்ந்துள்ள நிலையை வைத்தே வித்தியாசம் உண்டாகும்.

சந்திரன் ஒரு ராசியில் இரண்டே கால் நாட்கள், இரண்டே கால் வெவ்வேறு நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்ப, அவர் சஞ்சரிக்கும் ஸ்தானங்களின் பலன் அமையும், அதேபோல் அவருடைய பகை கிரகங்களான சுக்கிரன், சனி வீடுகளில் சஞ்சரிக்கும் போது அவருடைய பலன் வேறுபடும்.

சூரியன் எந்த ராசியில் அமர்ந்து உள்ளாரோ அந்த ராசியில் தொடங்கி, ஒவ்வொரு நாளும் 12 ராசிகளில் 12 லக்னங்கள் வகுக்கப்படுகிறது. காலை 8 மணிக்கு பிறக்கும் ஒரு குழந்தைக்கு ஒரு லக்னம் என்றால் பத்து மணிக்கு பிறக்கும் குழந்தைக்கு வேறு லக்னம் ஆகி விடுகிறது.

லக்னத்தை வைத்தே ஒரு ஜாதகரின் வாழ்க்கையை நாம் தீர்மானிக்கிறோம்.

ஒரு ஜாதகரின் லக்னம் என்ன? 12 வீடுகளும் எந்த எந்த கிரகங்கள் எப்படி எப்படி அமைந்துள்ளன? ஆட்சியாகவா? உச்சமாகவா? நட்பாகவா? பகையாகவா? நீச்சமாகவா? எந்த கிரகத்தின் சாரத்தில் அமர்ந்திருக்கிறார்கள்? எந்த கிரகத்தின் பார்வையை பெற்றிருக்கிறார்கள்? எந்த எந்த இடங்களை பார்க்கிறார்கள்? அந்த கிரகம் அமர்ந்த நட்சத்திரம் அந்த கிரகத்தின் நட்பு கிரகத்துக்குரியதா? பகை கிரகத்துக்கு உரியதா? சமகிரகத்துக்குரியதா என்பதை எல்லாம் பார்க்க வேண்டும்.

இவற்றையெல்லாம் பார்த்தே ஒரு ஜாதகர்க்குரிய பலனை நாம் தெரிந்து கொள்கிறோம்.

அதிலும் பாவ கிரகங்களான ராகு, கேதுக்கென்று சொந்த வீடு இல்லை. ஆனால் எந்த வீட்டில் அவர்கள் அமர்கிறார்களோ அந்த ராசிநாதன் வழங்கக்கூடிய பலன்களை அவர்கள் வழங்க கூடியவர்களாகின்றனர். அதேபோல் எந்த ஸ்தானத்தில் அவர்கள் அமர்கிறார்களோ, அந்த ஸ்தானத்தில் பலனை அவர்கள் கெடுத்து விடுகின்றனர்.

இவையெல்லாம் ஜோதிட விதி, இந்த நிலையை கிரகப்பெயர்ச்சியின் போது பலன் எடுப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சனி என்பவர் யார்? அவர் ஆயுள் காரகன் என்று மட்டும் தான் சொல்கிறோம். ஆனால் சனி பகவானே ரோகத்துக்கும், ஜீவனத்திற்கும், விரயத்திற்கும் காரணம் ஆகிறார். இவற்றுக்கெல்லாம் காரணமான சனி பகவான் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் போது அங்கிருந்து 3, 7,10 வீடுகளை அவர் பார்வையிட போகிறார். அதனால் அவர் நிற்கும் கும்ப ராசிக்கு என்ன பலன், பார்வையிடும், மேஷம், சிம்மம், விருச்சகம் ராசிகளுக்கு என்ன பலன் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒருவருடைய ராசி எந்த ராசியோ அதிலிருந்து அவர் சஞ்சாரம் செய்யும் ராசி எத்தனையாவது ராசியோ அதற்கு ஏற்ப அவருக்கு பலன் உண்டாகும்.

இப்படி எழுதப்படும் பலன் பொது பலன் மட்டும்தான். உங்களுக்கு ஒரு விதமான பலனோ, பெண்களுக்கு ஒரு விதமான பலனோ, இளைஞர்களுக்கு ஒரு விதமான பலனோ நடந்து விடாது.

சனி பெயர்ச்சியால் ஒரு ராசியினருக்கு சங்கடம் என்றால், முதியவருக்கும் சங்கடம்தான். குழந்தைக்கும் சங்கடம் தான். அந்த ராசியில் உள்ள அனைவருக்கும் சங்கடம் தான்.

குரு பெயர்ச்சியால் ஒரு ராசியினருக்கு திருமண யோகம் என்றால் திருமண வயதில் உள்ள ஆணுக்கும் திருமண யோகம் தான் பெண்ணுக்கும் திருமண யோகம் தான்.

கிரகப்பெயர்ச்சி பலன் என்பது எல்லா ராசியினருக்கும், அந்த கிரக பெயர்ச்சியால் உண்டாகக்கூடிய பழங்களை கூறி அவருடைய வாழ்க்கைக்கு மேலோட்டமாக வழிகாட்டும் பணிதான். காரணம், விருச்சிக ராசி என்று வைத்து க் கொண்டால் அந்த ராசியில் பிறந்த எல்லோருக்கும் ஒருவருக்கு அமைந்திருப்பது போலவே எல்லோருக்கும் எல்லாம் கிரகங்களும் அமைந்து விடாது. ஒருவருக்கு அமைந்திருப்பது போலவே எல்லோருக்கும் லக்னம் அமைந்து விடாது.

ஒருவருக்கு சூரியன் உச்சமாக இருக்கும், ஒருவருக்கு பகையாக இருக்கும், ஒருவருக்கு கேது திசை நடக்கும், அடுத்தவருக்கு சுக்கிர திசை நடக்கும். ஒருவருக்கு அவருக்கு நடக்கும் திசை இரண்டாம் திசையாக இருக்கும். அடுத்தவருக்கு ஆறாவது திசையாக இருக்கும்.

இதையெல்லாம் பார்க்கும் போது தான் ஒரு ஜாதகருக்கு உரிய முழுமையான பலன்களை எந்த ஜோதிடராலும் கூற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *