குழந்தையில்லாதவர்களுக்கான உளுந்து பரிகாரம்*

புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில், மீமிசல் என்ற ஊரில் உள்ளது கல்யாணராமர் கோவில். இங்கு திருமணமாகாதவர்களுக்கு உளுந்து பிரசாதம் வழங்கப்படுகிறது.

  1. இங்கு வரும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு, ராகுவின்
  2. தானியமான கருப்பு உளுந்தை, முகுந்தமாலா என்று கூறப்படும் மந்திரத்தை உச்சரித்து 90 நாட்களுக்கு தேவையான அளவு பிரசாதமாகத் தருகின்றனர்.

இதனை 90 நாட்கள் சாப்பிடுவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் நம்பிக்கையுள்ளது. அத்துடன் ராமர் சன்னதியில் தவழ்ந்த நிலையில் இருக்கும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட சந்தானகிருஷ்ணன் விக்ரகத்தை பூஜித்து, குழந்தை பாக்கியம் கோரி வரும் பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.

அதை மடியில் வைத்திருக்கும் பக்தர்கள் பூஜை முடிந்து வீடு திரும்பும் போது விக்ரகத்தை கோயிலில் வழங்கிவிட்டு செல்கின்றனர். இவ்வாறு சந்தான கிருஷ்ணனை மடியில் சுமப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த கோவில் நாகப்பட்டினம், இராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலையில் மீமிசல் என்ற இடத்தில் உள்ளது.
வாழ்க வளமுடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *